உயிர்பிழைத்த நீச்சல் வீராங்கனைக்கு இரண்டு நிமிடங்களுக்கு மூச்சில்லை

உயிர்பிழைத்த நீச்சல் வீராங்கனைக்கு இரண்டு நிமிடங்களுக்கு மூச்சில்லை

1 mins read
00b9bc52-b6da-465c-acb2-3715cc24fdbb
-

புடா­பெஸ்ட்: ஹங்­கேரி தலை­ந­கர் புடா­பெஸ்ட்­டில் உலக சாம்­பி­யன்­ஷிப் போட்­டி­யின்­போது நீச்­சல் குளத்­தில் மூழ்­கிக் கிடந்த அனிதா அல்­வா­ரெஸை அவ­ரது பயிற்­று­விப்­பா­ளர் கவ­னித்து மீட்­டார்.

அதிர்ஷ்­ட­வ­ச­மாக உயிர் பிழைத்த அல்­வா­ரெஸ் குறைந்­தது இரண்டு நிமி­டங்­க­ளுக்கு சுவா­சிக்­கா­மல் இருந்­தி­ருக்­க­லாம் என்று பயிற்­று­விப்­பா­ளர் ஆண்ட்­ரியா ஃபுவென்­டஸ் தெரி­வித்­தார்.

அவ­ரது நுரை­யீ­ரல்­களில் நீர் புகுந்து விட்­ட­தால் இரண்டு நிமி­டங்­க­ளுக்கு மூச்சு இல்லை என்­றார் நான்கு முறை ஒலிம்­பிக் கலை­நய நீச்­சல் போட்­டி­யில் பதக்­கம் பெற்ற பயிற்­று­விப்­பா­ளர்.

வாந்­தி­யெ­டுத்­தார், இரு­மி­னார், அதன் பிறகு அவ­ருக்கு மூச்சு திரும்­பி­யது என்று அவர் கூறி­னார். அல்­வா­ரெஸ், 25, புதன்­கி­ழமை இரவு நடை­பெற்ற தனி­ந­பர் இறு­திப் போட்­டியை முடித்­த­வு­டன் நீச்­சல் குளத்­தில் மயங்­கிய நிலை­யில் காணப்­பட்­டார். அப்­போது நீச்­சல் குளத்­தில் குதித்து அல்­வா­ரெஸை பயிற்­று­ விப்­பா­ளர் காப்­பாற்­றி­னார்.

இதற்­கி­டையே உயிர்க்­காப்­பா­ளர்­கள் விரைந்து செயல்­ப­டா­த­தால் உள்­ளூர் ஏற்­பாட்­டா­ளர்­களும் உள்­ளூர் விளை­யாட்டு ஒழுங்­கு­முறை அமைப்­பு­களும் கடு­மை­யாக விமர்­சிக்­கப்­பட்டு வரு­கின்­றனர்.