கடலின் ஆக ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போர் கப்பல்

கடலின் ஆக ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போர் கப்பல்

1 mins read
55360e05-c37a-40f0-af31-6ceb53ea621b
கிட்டத்தட்ட 7,000 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல் (படம்: ஏஃபி) -

இரண்டாம் உலகப் போரின்போது மூழ்கிய ஒரு அமெரிக்கக் கப்பல் பிலிப்பீன்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலில் கிட்டத்தட்ட 7,000 மீட்டர் ஆழத்தில் கப்பல் உள்ளது. இதுவே உலகில் ஆக ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட கப்பலாகும்.

அக்டோபர் 25, 1944ல் பிலிப்பீன்சை ஜப்பான் படைகளிலிருந்து தற்காத்துக் கொண்டிருந்தது அமெரிக்கப் போர்ப் படை கப்பலான சாமுவேல் பி. ராபர்ட்ஸ். பல நாள்கள் நீடித்த கடும் போரின்போது இந்தக் கப்பல் மூழ்கியது. இந்தக் கப்பலோடு சேர்த்து அன்று நான்கு கப்பல்கள் மூழ்கின.

மூழ்குவதற்கு முன் மூன்று நாள்கள் கடலில் கப்பல் மிதந்துகொண்டிருந்தது. இதிலிருந்த பல வீரர்கள் சண்டையின்போது ஏற்பட்ட காயங்களால் மடிந்தனர். வேறு சிலர் கடலில் உள்ள சுறா மீன்களுக்கு இறையாகினர். கப்பலில் இருந்த 224 வீரர்களில், 89 பேர் உயிரிழந்தனர்.

இதைக் கண்டுபிடித்த ஆராய்ச்சிக் குழு எட்டு முறை கடலுக்குள் முக்குளித்த பிறகே கப்பல் இருக்கும் இடத்தை கண்டறிந்தது. 6,895 மீட்டர் ஆழத்தில் கப்பல் மூழ்கியுள்ளது.

1912ல் மூழ்கிய டைட்டானிக் கப்பல் கடலில் 4,000 மீட்டர் ஆழத்தில் உள்ளது.