நார்வேயில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

நார்வேயில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

1 mins read
2da686a0-832b-4931-818e-74aee3281615
படங்கள்: ஏ:பி, ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 3

நார்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் இருவர் மாண்டனர். இந்தச் சம்பவத்தை பயங்கரவாதச் செயல் என அந்நாட்டு காவல் துறை விசாரித்துவருகிறது.

நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மூன்று இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் 21 பேர் காயமடைந்தனர். இதில் பத்து பேருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

இதன் தொடர்பில் ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நார்விஜியன் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏற்கெனெவே போதைப் பொருள், கத்தி போன்ற பொருள்களை வைத்திருந்ததற்காக அந்த நபர் சிலமுறை கைதுசெய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டை ஒருவர் மட்டும் நடத்தியதாக காவல் துறை தெரிவித்தது.

விடுதிக்கு வெளியே வந்துநின்ற சந்தேக நபர், பையிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்ததாக சம்பவத்தைப் பார்த்தவர்கள் கூறினர்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் விரும்பிச் செல்லும் விடுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால், இன்று இடம்பெற இருந்த பிராய்ட் ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நார்வே நாட்டில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மிக அரிது.