துப்பாக்கி கட்டுப்பாட்டுக்கு அமெரிக்கா ஒப்புதல்

துப்பாக்கி கட்டுப்பாட்டுக்கு அமெரிக்கா ஒப்புதல்

2 mins read
a0d3b41c-c1cc-4538-abff-e3fee99d291c
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றத்­தின் மக்­க­ளவை துப்­பாக்­கிப் பயன்­பாட்­டைக் கட்­டுப்­ப­டுத்­தும் சட்ட மசோ­தா­விற்கு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

கிட்­டத்­தட்ட 30 ஆண்­டு­களில் முதல்­மு­றை­யாக இத்­த­கைய குறிப்­பி­டத்­தக்க சட்­டம் அங்கு நடப்­புக்கு வர­வி­ருக்­கிறது.

மக்­க­ள­வை­யின் குடி­ய­ர­சுக் கட்சி உறுப்­பி­னர்­கள் 14 பேரும் ஜன­நா­ய­கக் கட்சி உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் என மொத்­தம் 234 பேர் மசோ­தா­விற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­னர்; இதனை எதிர்த்து 193 வாக்­கு­கள் பதி­வா­யின.

இனி அதி­பர் ஜோ பைடன் கையெ­ழுத்­திட்ட பிறகு மசோதா சட்ட அங்­கீ­கா­ரம் பெறும்.

புதிய சட்­டத்­தின்­கீழ் இளை­யர்­கள் துப்­பாக்கி வாங்­கு­வ­தற்­குக் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­படும்.

மிரட்­ட­லா­கக் கரு­தப்­ப­டு­வோ­ரி­ட­மி­ருந்து துப்­பாக்­கி­க­ளைப் பறி­மு­தல் செய்ய மாநில அர­சாங்­கங்­களை இது ஊக்­கு­விக்­கும்.

முன்­ன­தாக சென்ற வியா­ழக்­கி­ழமை அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றத்­தின் செனட் சபை உறுப்­பி­னர்­கள் 65 பேர் இந்த மசோ­தா­விற்கு ஆத­ர­வா­க­வும் 33 பேர் எதிர்ப்பு தெரி­வித்­தும் வாக்­க­ளித்­த­னர். ஆத­ர­வாக வாக்­க­ளித்­தோ­ரில் 15 பேர் குடி­ய­ர­சுக் கட்சி செனட்­டர்கள்.

இத­னை­ய­டுத்­துப் பேசிய அதி­பர் பைடன், " இந்­தச் சட்­டம் அமெ­ரிக்­கர்­க­ளைப் பாது­காக்­கும்; பள்­ளிக் குழந்­தை­க­ளுக்­கும் சமூ­கத்­தி­ன­ருக்­கும் பாது­காப்பு தரக்­கூ­டிய இந்த மசோ­தா­விற்கு மக்­க­ள­வை­யும் ஆத­ர­வாக வாக்­க­ளிக்க வேண்­டும்," என்று கேட்­டுக்­கொண்டார்.

அமெ­ரிக்­கா­வில் இந்த ஆண்­டில் மட்­டும் 20,800க்கும் அதி­க­மா­னோர் துப்­பாக்­கி­யால் சுடப்­பட்டு உயி­ரி­ழந்­த­தாக 'கன் வய­லன்ஸ் ஆர்க்­கைவ்' எனும் லாப நோக்­க­மற்ற அமைப்பு கூறு­கிறது.

புதிய சட்­டத்­திற்கு குடி­ய­ர­சுக் கட்சி, ஜன­நா­ய­கக் கட்சி என இரு­த­ரப்­பின் ஆத­ர­வும் கிடைத்­தி­ருப்­பது முக்­கிய மைல்­கல்­லா­கக் கரு­தப்­படு­கிறது.