வேலை மோசடியில் சிக்கிய மலேசிய சிறுவர்கள் தாயகம் திரும்பினர்

கோலா­லம்­பூர்: மியன்­மா­ரில் வாடிக்­கை­யா­ளர் சேவை அதி­கா­ரி­க­ளாக வேலை­வாய்ப்பு தரு­வ­தா­கக் கூறி பின்­னர் மோச­டிக் கும்­ப­லுக்கு வேலை­பார்க்க வலி­யு­றுத்­தப்­பட்ட மலே­சி­யச் சிறு­வர்­கள் தாய­கம் திரும்­பி­யுள்­ள­னர்.

பாகாங் மாநி­லத்­தைச் சேர்ந்த இரு­வ­ருக்­கும் முறையே 14, 15 வயது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

‘ஃபேஸ்புக்’, ‘இன்ஸ்­ட­கி­ராம்’ ஆகி­ய­வற்­றில் வெளி­யான விளம்­ப­ரங்­கள் மாதச் சம்­ப­ள­மாக 5,000 மற்­றும் 7,000 ரிங்­கிட்­டு­கள் தரப்­படும் என்று கூறி­யதை நம்பி மியன்­மார் சென்­ற­தா­க­வும் ஆனால் தாங்­கள் காதல் மோச­டி­யில் வலுக்­கட்­டா­ய­மாக ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­தா­க­வும் சிறு­வர்­கள் கூறி­னர்.

“இவ்­வாறு பலர் மோச­டிக்­காரர்­க­ளி­டம் பிடி­பட்­டுள்­ள­னர். நிர்­ண­யித்த இலக்­கு­களை எட்ட இய­லா­தோரை அவர்­கள் கொடு­மைப்­ப­டுத்­தி­னர்.

“நாங்­களும் இலக்கை எட்­ட­வில்லை; ஆனா­லும் எங்­களை விட்­டு­வி­டும்­படி அவர்­க­ளி­டம் கெஞ்­சி­னோம்,” என்றும் இவர்கள் குறிப்பிட்டனர்.

மோச­டிக்­கா­ரர்­கள் பின்­னர் சிறு­வர்­களை விடு­விக்க இவர்­கள் குடும்­பத்­தி­ன­ரைப் பணம் கேட்டு மிரட்­டி­ய­தாக மலே­சிய அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். இவ்­வாறு வெளி­நாட்டு மோச­டிக் கும்­பல்­களிடம் சிக்­கிய 63 ஆண்­கள், 15 பெண்­கள் குறித்­துப் புகார் செய்யப்்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் இவர்­களில் 15 பேர் நாடு திரும்­பி­ய­தா­க­வும் தெரிவிக்கப்பட்டது.

வெளி­நாட்டு வேலை­­களை ஏற்றுக்­கொள்­ளும்­போது மலே­சி­யர்­கள் விழிப்­பு­டன் இருக்­க­வேண்­டும் என்­று அதிகாரிகள் வலி­யு­றுத்­தி­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!