'அமெரிக்கா பொருளியல் மந்தத்தைத் தவிர்ப்பது சிரமம்'

'அமெரிக்கா பொருளியல் மந்தத்தைத் தவிர்ப்பது சிரமம்'

1 mins read
c95cf456-0662-4e1f-a8a8-4dd9e5ee7a78
-

வாஷிங்­டன்: அனைத்­து­ல­கப் பண நிதி­யத்­தின் தலை­வர் கிறிஸ்­ட­லினா ஜார்­ஜிவா, அமெ­ரிக்கா பொரு­ளி­யல் மந்­தத்­தைத் தவிர்ப்­ப­தற்­கான சாத்­தி­யங்­கள் குறைந்து வரு­வ­தா­கக் கூறி­யி­ருக்­கி­றார்.

பண­வீக்க விகி­தம் அதி­க­ரிப்­ப­தை­யும், நாட்­டின் மத்­திய வங்கி வட்டி விகி­தங்­களை உயர்த்­தி­யிருப்­ப­தை­யும் அவர் சுட்­டி­னார்.

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லால் ஏற்­பட்ட பொரு­ளி­யல் பாதிப்­பு­களில் இருந்து வலு­வாக மீண்டு வந்­தா­லும் விலை­வாசி உயர்­வால் விரும்­பத்­த­காத பின்­வி­ளை­வு­கள் ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கத் திரு­வாட்டி ஜார்­ஜிவா கூறி­னார்.

வட்டி விகித உயர்வு பண­வீக்­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் என்று நிதி­யம் நம்­பு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், அதே­நே­ரத்­தில் பொரு­ளி­யல் மந்­த­நி­லை­யைத் தவிர்ப்­ப­தற்­கான பாதை குறு­கி­வ­ரு­வ­தா­கச் சொன்­னார்.