'நார்வே தாக்குதல் ஒரு பயங்கரவாத செயல்'

1 mins read
1ab58a2a-2b3b-4d6e-bab7-96c1b33422fc
ஒஸ்லோ நகரில் தாக்குதல் நிகழ்ந்த இடத்தில் மாண்டோருக்கு மரியாதை செலுத்தும் மக்கள். படம்: ஏஎஃப்பி -

ஒஸ்லோ: நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை அந்நாட்டுக் காவல்துறையினர் பயங்கரவாதச் செயலாக வகைப்படுத்தியுள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று (24 ஜூன்) ஓரினக் காதலர்களிடையே பிரபலமாக இருக்கும் இரவு கேளிக்கை கூடத்திலும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட அந்தக் தாக்குதலில் இருவர் மாண்டனர், 21 பேர் காயமுற்றனர்.

தாக்குதலை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு 42 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கடந்த மே மாதம் அவர் விசாரிக்கப்பட்டதாக நார்வேயின் பிரதமர் ஜோனாஸ் காஸ் ஸ்டோரெ கூறினார்.

அப்போது அந்நபரால் ஆபத்து ஏதும் இல்லை என்று கணிக்கப்பட்டிருந்ததாகத் அவர் தெரிவித்தார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் முடிவுகளை ஆராயவேண்டும் என்று திரு ஸ்டோரெ குறிப்பிட்டார்.