மலேசியாவில் விலைவாசியைச் சமாளிக்க $24.4 பில்லியன் மானியம்

மலேசியாவில் விலைவாசியைச் சமாளிக்க $24.4 பில்லியன் மானியம்

1 mins read
a7b9d127-0493-477a-9705-7135769e86e0
மலேசிய தலைநகர் கோலாலம்பூர். கோப்புப் படம்: பிஸ்னஸ் டைம்ஸ் -

அதிகரிக்கும் விலைவாசியால் அவதியுறும் மலேசியர்களுக்கு உதவ சுமார் 77.3 பில்லியன் ரிங்கிட் ($24.4 பில்லியன்) மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் நிதி அமைச்சர் துங்கு ஸஃப்ருல் அப்துல் அசிஸ் இதனை அறிவித்தார்.

இதுவரை எந்த மலேசிய அரசாங்கமும் இவ்வளவு பெரிய தொகையை மானியமாக வழங்கியதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

பெட்ரோல், டீசல், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயு மற்றும் எண்ணெய், மாவு, மின்சாரம் ஆகியவற்றுக்கு ஏற்படும் செலவினத்தைச் சமாளிக்க இந்த நிதி கைகொடுக்கும் என்று திரு ஸஃப்ருல் சுட்டினார்.

"சமூக நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியைச் சேர்த்துக்கொண்டால் தற்போதைய நிலவரப்படி இவ்வாண்டு ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 77.3 பில்லியன் ரிங்கிட் மானியத் தொகை வழங்கப்படுகிறது," என்று திரு ஸஃப்ருல் சொன்னார்.