பேங்காக்கில் தீ, குறைந்தது இருவர் பலி

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் ஒரு சந்தைப் பகுதியில் மூண்ட தீயில் குறைந்தது இருவர் மாண்டனர்.

புகையை நுகர்ந்ததால் ஒன்பது பேர் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் பேங்காக்கின் சைனாடவுன் வட்டாரத்தில் நிகழ்ந்தது.

ஓடும்போது 'பவர் ட்ரான்ஸ்ஃபார்மர்' எனப்படும் மின்சார விநியோக சாதனம் வெடிக்கும் சத்தம் தங்களுக்குக் கேட்டதாக மக்கள் சிலர் தெரிவித்தனர்.

மூன்று மாடிக் கட்டடம் ஒன்றில் மின்சார விநியோக சாதனம் வெடித்ததாக பேங்காக் நகர ஆளுநர் சட்சார்ட் சிட்டிப்பன்ட் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதனால்தான் தீ மூண்டதாக அவர் குறிப்பிட்டார்.

தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகச் சொன்ன அவர், புகையை நுகர்ந்தோரில் பெரும்பாலோர் தீயணைப்பு அதிகாரிகள் என்று தெரிவித்தார்.

மாண்டோரில் ஒருவர் மியன்மாரைச் சேர்ந்த 35 வயது வெளிநாட்டு ஊழியர்.

மற்றொருவர் தாய்லாந்தைச் சேர்ந்தவர். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!