விலைவாசியைச் சமாளிக்க $24.4 பில்லியன் மானியம்

விலைவாசியைச் சமாளிக்க $24.4 பில்லியன் மானியம்

2 mins read
7877a6e6-d6fb-45f7-bc63-ce7bc69c57c0
-

கோலாலம்பூர்: அதிகரிக்கும் விலைவாசியால் அவதியுறும் மலேசியர்களுக்கு உதவும் வகையில் ஏறத்தாழ 77.3 பில்லியன் ரிங்கிட் ($24.4 பில்லியன்) மானியம் வழங்கப்படும் என்று மலேசியாவின் நிதி அமைச்சர் துங்கு ஸஃப்ருல் அப்துல் அசிஸ் அறிவித்துள்ளார்.

இதுவரை எந்த ஒரு மலேசிய அரசாங்கமும் இத்தகைய பெரும் தொகையை மானியமாக வழங்கியதில்லை என்றார் அவர்.

பெட்ரோல், டீசல், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயு, சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய், மாவு, மின்சாரம் ஆகியவற்றுக்கு ஏற்படும் செலவினத்தைச் சமாளிக்க இந்த நிதி கைகொடுக்கும் என்றார் திரு ஸஃப்ருல்.

"சமூக நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியைச் சேர்த்துக்கொண்டால் தற்போதைய நிலவரப்படி இவ்வாண்டு ஒட்டு மொத்தமாக கிட்டத்தட்ட 77.3 பில்லியன் ரிங்கிட் மானியத் தொகை வழங்கப்படுகிறது," என்று திரு ஸஃப்ருல் தெரிவித்தார்.

குறைந்த வருமானக் குடும்பங்களுக்காக அண்மையில் கூடுதலாக 630 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இப்பிரிவினருக்கு வழங்கப்படும் மானியம் 1.74 பில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவும் ஒட்டுமொத்த மானியத் தொகையில் அடங்கும் என்றார் அமைச்சர் ஸஃப்ருல்.

இவ்வாண்டின் பிற்பகுதியில் மலேசியர்களின் மின்சாரக் கட்டணம் உயராமல் இருக்க 5.8 பில்லியன் மானியத் தொகை நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

உக்­ரேன்-ரஷ்யா போர் கார­ண­மாக உல­க­ளா­விய விநி­யோ­கச் சங்­கிலி வெகு­வா­கப் பாதிப்­ப­டைந்­தி­ருப்­ப­தால் பண­வீக்­க­மும் விலை­வா­சி­யும் அதி­க­ரித்­தி­ருப்­ப­தைச் சுட்­டிய திரு ஸஃப்ருல், மலே­சி­யர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள இந்­தச் சுமை­யைக் குறைக்க அனைத்து வகை நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

"வெளி­நா­டு­களில் நடக்­கும் நிகழ்­வு­க­ளால் மலே­சி­யா­வில் விலை­வாசி அதி­க­ரிக்­கிறது. மலே­சி­யா­வின் பொரு­ளி­ய­லுக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் இத்­த­கைய சூழல்­களை நிதி அமைச்சு தொடர்ந்து உன்­னிப்­பா­கக் கண்­கா­ணிக்­கும். மலே­சி­யர்­க­ளின் வாழ்க்­கைச் செல­வி­னம் கட்­டுக்­குள் இருப்­பதை அர­சாங்­கம் உறுதி செய்­யும்," என்று திரு ஸஃப்ருல் கூறி­னார்.