ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிர்பிழைத்தோரை மிரட்டும் ‘காலரா’

காபூல்: அண்­மை­யில் ஆப்­கா­னிஸ்­தா­னின் கிழக்­குப் பகு­தி­யில் ஏற்­பட்ட மிக மோச­மான நில­ந­டுக்­கத்­தில் குறைந்­தது 1,000 பேர் மாண்­ட­னர். கிட்­டத்­தட்ட 2,000 பேர் காய­முற்­ற­னர். நில­ந­டுக்­கம் கார­ண­மாக ஏறத்­தாழ 10,000 வீடு­கள் தரை­மட்­ட­மா­கின.

ஆனால் பிரச்­சினை அத்­து­டன் முடிந்­து­வி­ட­வில்லை என்று ஐநா­வின் மனி­தா­பி­மான விவ­கா­ரங்­கள் பிரிவு ஆப்­கானிஸ்­தான் அர­சாங்­கத்தை எச்­ச­ரித்­துள்­ளது.

நில­ந­டுக்­கத்­தில் உயிர்­பி­ழைத்­தோ­ரி­டையே ‘காலரா’ எனப்­படும் வாந்தி, பேதி நோய் பர­வும்

அபா­யம் இருப்­ப­தாக அது கவலை தெரி­வித்­துள்­ளது.

இந்த நோயால் பலரின்

உயி­ருக்கு ஆபத்து ஏற்­ப­டக்­கூ­டும் என்று அது கூறி­யது.

பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு உண­வும் சுத்­த­மான தண்­ணீ­ரும் தேவைப்­

ப­டு­வ­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­

வ­னத்­தி­டம் ஆப்­கா­னிஸ்­தான் சுகா­தார அமைச்­சின் செய்­தித்­தொ­டர்­பா­ளர் ஷரா­ஃபத் ஸமான் தெரி­வித்­தார். காய­முற்­ற­வர்­க­ளுக்கு ஒரு­வ­ழி­யாக மருந்து வழங்கி தற்­போ­தைக்­குச் சமா­ளித்­து­விட்­ட­தாக அவர் கூறி­னார்.

ஆனால் வீடு­களை இழந்­தோ­ருக்கு கைகொ­டுப்­பது சவால்­மிக்­க­தாக இருப்­ப­தாக அவர் தெரிவித்­தார்.

“உயிர்­பி­ழைத்­தோ­ருக்­குத் தேவை­யான உணவு, மருந்து ஆகி­ய­வற்றை வழங்க எங்­க­ளுக்கு உதவு­ மாறு அனைத்­து­ல­கச் சமூ­கத்­தி­ன­ரை­யும் மனி­தா­பி­மான அமைப்­பு­

க­ளை­யும் கேட்­டுக்­கொள்கி­றோம். முறை­யான வசிப்­பி­டங்­கள் இல்­லா­த­தால் அவர்­க­ளுக்கு கடு­மை­யான நோய்­கள் ஏற்­படும் அபா­யம் உள்­ளது,” என்று திரு ஷரா­ஃபத் கூறி­னார்.

பாதிப்­ப­டைந்­தோ­ருக்கு உத­வும் நோக்­கில் அவர்­க­ளுக்­குத் தேவை­யான அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை ஐநா­வும் பல நாடு­களும் அனுப்­பி­வைத்­துள்­ளன. இவை அடுத்த சில நாள்­களில் பாதிப்­

ப­டைந்­தோ­ரைச் சென்­ற­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!