கொலம்பியாவில் காளையை அடக்கும் போட்டியின்போது பார்வையாளர்கள் அமர்ந்திருந்த ஒரு பகுதி இடிந்துவிழுந்ததில் குறைந்தது நால்வர் மாண்டனர்.
அந்நாட்டின் டொலிமா பகுதியில் உள்ள எல் எஸ்பினால் விளையாட்டரங்கில் பார்வையாளர்கள் திரளும் மூன்று மாடி அமைப்பு இடிந்துவிழுந்ததால் விபத்து நேர்ந்தது.
மாண்டோரில் இரு பெண்கள், ஓர் ஆடவர், ஒரு பிள்ளை ஆகியோர் அடங்குவர்.
சுமார் 322 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் குறைந்தது நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இடிபாடுகளிலிருந்து மக்கள் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் போட்டியில் இடம்பெற்ற ஒரு காளை தொடர்ந்து அரங்கை வலம் வந்தது.
பிரபல சான் பெட்ரோ விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமையன்று (26 ஜூன்) காளையை அடக்கும் போட்டி நடைபெற்றது.

