விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சுவர்ப்பந்து வீராங்கனை சிவசங்கரி

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சுவர்ப்பந்து வீராங்கனை சிவசங்கரி

1 mins read
4f1c36cf-d158-469e-ba2a-26fea765ad50
விபத்தில் சிக்கிய மலேசியாவின் சுவர்ப்பந்து நட்சத்திரம் சிவசங்கரி. -

மலேசியாவின் ஆகச் சிறந்த சுவர்ப்பந்து வீராங்கனையான எஸ். சிவசங்கரி வாகன விபத்தில் சிக்கி மோசமான காயங்களுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் அவர் காமன்வெல்த் விளையாட்டுகளில் பங்கேற்கமாட்டார்.

மாஜு விரைவுச்சாலையில் நிகழ்ந்த வாகன விபத்தில் 23 வயது சிவசங்கரி சிக்கினார்.

அவர் அமர்ந்திருந்த வாகனத்துடன் லாரி ஒன்று மோதியது.

வாகனம் தீப்பிடிப்பதற்கு முன்பு அவர் மீட்கப்பட்டதாக சில ஊடகங்கள் தெரிவித்தன.

ஆனால் தலையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதால் சிவசங்கரி அவசரமாக புத்திரஜெயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமையன்று (26 ஜூன்) அவருக்கு அவசரமாக அறுவை சிசிச்கை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அவர் சுயநினைவுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.