சோல்: நேட்டோ பாணியில் ஆசியாவில் ராணுவ கூட்டணியை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி செய்கிறது என்று வடகொரியா குற்றம் சாட்டி உள்ளது. ஐந்து ஆண்டுகளில் இல்லாமல் முதல்முறையாக அணுவாயுத சோதனையை நடத்த வடகொரியா தயாராகி வருவதாகக் கூறப்படும் நிலையில் வடகொரியா, அமெரிக்காவை குற்றம் சாட்டி உள்ளது. அண்மையில் தென்கொரிய அதிபர் யூன் சுக்-இயோலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டனர். இந்த ஒப்பந்தம் தேவை ஏற்பட்டால் வட கொரியாவுக்கு எதிராக அதிக அளவில் அமெரிக்க ஆயுதங்களை தென் கொரியாவுக்கு அனுப்பி வைக்க வழி வகை செய்கிறது. "ஜப்பான் மற்றும் தென்கொரியாவுடன் அப்பட்ட மாக கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தும் அமெரிக்கா, ஆசிய பாணி நேட்டோவை உருவாக்க நட வடிக்கை எடுத்து வருகிறது," என்று வடகொரியா கூறியது.
'ஆசியாவில் நேட்டோ பாணி கூட்டணி'
1 mins read
-

