மாஸ்கோ: ரஷ்யா, ஒரு நூற்றாண்டில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்தவில்லை.
மே 27ஆம் தேதி அன்று வட்டி செலுத்துவதற்கான 30 நாள் காலக்கெடு இம்மாதம் 29ஆம் தேதி இரவு முடிவடைந்தது. அதற்குள் கடன் தவணையைச் செலுத்த ரஷ்யா தவறிவிட்டது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் இதனை ரஷ்யா மறுத்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய கிரெம்ளின் பேச்சாளர், மே மாதத் திலேயே பத்திரங்கள் மூலமாக ரஷ்யா கடனை திருப்பிச் செலுத்தி விட்டது. ஆனால் ரஷ்யா மீது மேற் கத்திய நாடுகள் விதித்த தடையால் அது முடக்கப்பட்டுள்ளது. இது எங்களுடைய பிரச்சினை அல்ல என்றார்.
உக்ரேன் மீது போர் தொடுத்து உள்ள ரஷ்யா மீது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பலதரப்பட்ட பொருளியல் தடைகளை விதித்து உள்ளன. மேலும் ரஷ்யாவின் கையிருப்பில் உள்ள டாலர், வெளிநாட்டு நாணயம், தங்கம் உள்ளிட்டவை வெளிநாடுகளில் முடக்கி வைக்கப் பட்டுள்ளன. இதனை ரஷ்யா பயன் படுத்த முடியவில்லை. இருந்தாலும் நெருக்கடியைச் சமாளிக்க தன்னிடம் நிதி இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. "இது, நட்பற்ற நாடு களால் உருவாக்கப்பட்ட செயற்கை நிலைமை. எங்களிடம் பணம் உள்ளது. கடனை திருப்பிச் செலுத்துவோம்," என்று ரஷ்யா கூறியுள்ளது.
ரஷ்யா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் விதித்துள்ள தடையால் ரஷ்யாவுக்கு மட்டுமல்லாமல் இதனால் கச்சா எண்ணெய், முக்கிய உணவுப் பொருள் விநி யோகம் பாதிக்கப்பட்டு மற்ற நாடு களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி யுள்ளது. இதற்கிடையே ஜப்பான் நேற்று ரஷ்யாவுக்கு எதிராக தங்க இறக்குமதி உள்ளிட்ட தடை ஜப் பான் அறிவித்தது. இதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

