விளையாட்டுச் செய்திகள்

மருத்துவமனையில்

‘ஸ்குவாஷ்’ சிவசங்கரி

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் தேசிய சுவர்ப் பந்து வீராங்கனையான சிவசங்கரி(படம்), விபத்தில் சிக்கி காயம் அடைந்ததால் அவர் காமன்வெல்த் விளையாட்டுகளில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று மாஜு நெடுஞ்சாலையில் 23 வயது சிவசங்கரி பயணியாக காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது லாரி மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் காயம் அடைந்த அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்து என்று மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன. உலகின் 19வது முன்னணி வீராங்கனையான அவர் காமன்வெல்த் விளையாட்டு களில் ஒற்றையர் பிரிவிலும் இரட்டையர் பிரிவிலும் ஜொலிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. காமன்வெல்த் விளையாட்டுகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரையில் இங்கிலாந்தின் பெர்மிங்ஹாமில் நடைபெறுகிறது.

நீச்சல் வீரர் சங்கத்துக்கு

மார்க் சே போட்டி

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நீச்சல் வீரர் சங்கத்துக்கு சிங்கப்பூரின் முன்னாள் தேசிய நீச்சல் வீரர் மார்க் சே (படம்) போட்டியிடுகிறார். வரும் 29ஆம் தேதி புதன்கிழமை சங்கத்தின் தேர்தல் நடைபெறுகிறது. அனைத்துலக விளையாட்டுகள் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகம் உட்பட பல நிறுவனங்களில் திரு மார்க் சே, 40 இயக்கு நராக உள்ளார். சங்கத்தின் தலைவரானால் நீர் விளை யாட்டுகளில் சிங்கப்பூரர்கள் பங்கேற்பது குறைந்து வருவதை மாற்றி அதிக வீரர்கள் போட்டியிடும் அளவுக்கு சிங்கப்பூரர்களுக்கான அடித்தளத்தை விரிவுபடுத்தப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான முதல்

போட்டியில் இந்தியா வெற்றி

டப்ளின்: அயர்லாந்துக்கு எதிரான முதல் ‘டி20’ கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அயர்லாந்து தொடரில் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட் உட்பட முன்னணி வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. மழை காரணமாக 12 ஓவராக குறைக்கப்பட்டது. பூவா, தலையாவில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய அயர்லாந்து நான்கு விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களை எடுத்தது. இந்தியா 9.2 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்களை எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!