முடக்கநிலைக்கே தள்ளப்பட்டுள்ள இலங்கை

முடக்கநிலைக்கே தள்ளப்பட்டுள்ள இலங்கை

1 mins read
e5167117-5135-48f2-b492-f13c1d9e9986
கொழும்பில் எரிபொருள் வாங்க வரிசையில் நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

இலங்கையில் தனியார் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

அந்நாட்டில் எரிபொருள் விநியோகம் திடீரென கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வீட்டிலேயே இருக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அடுத்த மாதம் 10ஆம் தேதிவரை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் எரிபொருளை விநியோகிக்க இலங்கையின் அமைச்சர்கள் முடிவு செய்துள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதனால் மக்களிடையே அதிருப்தி அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பெரும் பொருளியல் நெருக்கடியை எதிர்நோக்கிவரும் இலங்கையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்க அந்நாட்டின் அரசாங்கம் சிரமப்பட்டு வருகிறது.