அமெரிக்காவின் சான் அண்டோனியோ நகரில், தண்டவாளத்துக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்தை அந்நாட்டு காவல்துறையினர் நேற்று முன்தினம் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தனர்.
கனரக வாகனத்தின் கொள்
கலனுக்குள் ஏறத்தாழ 46 குடியேறி கள் மாண்டு கிடந்தனர்.
அமெரிக்கா-மெக்சிக்கோ எல்லையில் ஆள் கடத்தலில் ஈடுபடுவோரால் இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கக்
கூடும் என்று நம்பப்படுகிறது. குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த ஏறத்தாழ 16 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். கடுமையான வெப்பம், சோர்வு ஆகியவற்றால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவர். இந்தச் சம்பவம் தொடர்பாக மூவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்து
கின்றனர்.
குடியேறிகள் மூச்சுத்திணறி மாண்ட இச்சம்பவம் மீளாத் துயரத்தைத் தருவதாக மெக்சிக்கோவின் வெளியுறவு அமைச்சர் மார்சேலோ எப்ரார்ட் டுவிட்டரில் பதிவிட்டார். பாதிக்கப்பட்ட குடியேறிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அமெரிக்க அதிகாரிகள்
இன்னும் உறுதி செய்யவில்லை.
இருப்பினும், அமெரிக்காவில் உள்ள மெக்சிக்கோ தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்திருப்பதாக திரு எப்ரார்ட் தெரிவித்தார். அண்மைக் காலமாக முன் இல்லாத அளவில் மெக்சிக்கோவிலிருந்து பலர் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதாக அதிகாரிகள் கூறினர். இதன் காரணமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் குடிநுழைவுக் கொள்கைகள் மிகக் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. அமெரிக்கா-மெக்சிக்கோ எல்லைப் பகுதியில் அடிக்கடி நிகழும் ஆள் கடத்தல் குற்றங்களை எதிர்கொள்ள கடுமையான சட்டங்களை அதிபர் பைடன் நடை
முறைப்படுத்தவில்லை என்று அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன. 2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இதே போன்ற துயரச் சம்பவம் சான் அண்டோனியாவில் நிகழ்ந்தது. கடைத்
தொகுதி வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துக்குள் பத்து குடியேறிகள் மாண்டு கிடந்தனர். அந்த வாகனத்தின் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

