இவ்வாண்டு தாய்லாந்துக்கு 2 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் சென்றனர்

இவ்வாண்டு தாய்லாந்துக்கு 2 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் சென்றனர்

1 mins read
c4900b08-3c4f-42d1-9f61-53ecd84825b1
-

பேங்­காக்: தாய்­லாந்­துக்கு இவ்­வாண்டு இது­வரை 2 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான சுற்­றுப்­ப­ய­ணி­கள் சென்று வந்­துள்­ள­னர்.

இவ்­வாண்டு ஜன­வரி 1 முதல் ஜூன் 26ஆம் தேதி வரை­யி­லான ஆறு மாத கட்­டத்­தில் 2.03 மில்­லி­யன் வெளி­நாட்டு சுற்­றுப்­ப­ய­ணி­கள் தாய்­லாந்­துக்கு வந்­த­தாக துணை அர­சாங்க பேச்­சா­ளர் ஒரு­வர் நேற்று முன்­தி­னம் வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது.

இந்­தியா, மலே­சியா, பிரிட்­டன், சிங்­கப்­பூர், அமெ­ரிக்கா ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த சுற்­றுப்­ப­ய­ணி­கள் பட்­டி­ய­லில் முதல் ஐந்து நிலை­களில் வந்­த­தாக அவர் கூறி­னார்.

கொவிட்-19 பெருந்­தொற்­றின்­போது பெரி­தும் பாதிக்­கப்­பட்டு இருந்த தாய்­லாந்­தின் சுற்­றுப்­பயணத்­துறை, ஜூலை 1ஆம் தேதி­மு­தல் பய­ணம் தொடர்­பான சில விதி­மு­றை­க­ளைத் தளர்த்­து­கிறது. பய­ணத்­திற்கு முந்­தைய பதி­வும் கட்­டாய மருத்­து­வக் காப்­பு­று­தி­யும் இனி தேவை இருக்­க­மாட்டா.

இத­னால், தாய்­லாந்­துக்கு வரும் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை மாதம் ஒன்­றுக்கு சரா­ச­ரி­யாக 1.5 மில்­லி­யனை எட்­டும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

இந்த ஆண்டு 7.5 மில்­லி­யன் வெளி­நாட்டு சுற்­றுப்­ப­ய­ணி­களை ஈர்க்க தாய்­லாந்­தின் சுற்­றுப்­ப­யண, விளை­யாட்­டுத்­துறை அமைச்சு இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.

சீனா­வின் கடு­மை­யான கொவிட்-19 விதி­மு­றை­கள் கார­ண­மாக அந்த நாட்­டி­லி­ருந்து தாய்­லாந்­துக்கு வரு­வோர் எண்­ணிக்கை மிக­வும் குறை­வாக இருக்­கும் என்­பதை­யும் உக்­ரே­னில் நில­வி­வ­ரும் போரை­யும் அமைச்சு கருத்­தில் கொண்­டுள்­ளது.

2019ல் தாய்­லாந்­துக்கு வந்த 40 மில்­லி­யன் சுற்­றுப்­ப­ய­ணி­களில் சீனப் பய­ணி­கள் கிட்­டத்­தட்ட 30 விழுக்­காடு பங்கு வகித்து இருந்­த­னர்.