பயணிகளுக்கான தனிமை உத்தரவை தளர்த்தியது சீனா

பயணிகளுக்கான தனிமை உத்தரவை தளர்த்தியது சீனா

1 mins read
30a073fe-074c-4162-ac73-c17d6ff48873
-

பெய்­ஜிங்: சீனா அதன் கொவிட்-19 தனி­மைப்­ப­டுத்­து­தல் விதி­மு­றை­யைத் தளர்த்­தி­யுள்­ளது. இத­னால், சீனா செல்­லும் வெளி­நாட்­டுப் பயணி­கள் அங்கு சென்று இறங்­கி­ய­வு­டன் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டிய காலம் பாதி­யாகக் குறைக்­கப்­பட்­டுள்­ளது.

சீனா அதன் கொவிட்-19 கொள்­கை­யில் இது­வரை செய்­துள்ள ஆகப்­பெ­ரிய மாற்­றம் இது.

சீனா சென்று இறங்­கி­ய­வு­டன் அங்கு ஏழு நாள்­க­ளுக்­குத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும். மேலும் மூன்று நாள்­க­ளுக்கு வீட்­டில் தங்­கள் சுகா­தா­ரத்­தைப் பய­ணி­கள் கண்­கா­ணிக்க வேண்­டும்.

தேசிய சுகா­தார ஆணை­யம் நேற்று வெளி­யிட்ட அர­சாங்க வழி­காட்டி நெறி­முறை ஒன்­றில் இது தெரி­விக்­கப்­பட்­டது.

முன்­ன­தாக, சீனா சென்­றோர் அங்­குள்ள ஹோட்­டல்­களில் 21 நாள்­கள் வரை தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. என்றாலும், தனி­மைக்­கா­லத்­தின் கடைசி வாரத்­தில் சில­ரால் தங்­கள் வீட்­டி­லேயே தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள முடிந்­தது.

தனி­மைக்­கா­லத்­தில் பரி­சோ­தனை விதி­மு­றை­யும் தளர்த்­தப்­பட்டு உள்­ளது. கடந்த ஆண்டு மே மாதத்­திற்­குப் பிறகு முதன்­மு­றை­யாக புதுப்­பிக்­கப்­பட்டு உள்ள இந்த வழி­காட்டி நெறி­மு­றை­கள், பய­ணி­கள் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டி­ருக்க வேண்­டும் என்­பது பற்றி குறிப்­பி­ட­வில்லை.

வெளி­நாட்டு சுற்­றுப்­ப­ய­ணி­களுக்கு சீனா தன் எல்­லையை இன்­னும் முழு­மை­யா­கத் திறக்­க­வில்லை.

இந்­நி­லை­யில், சீனத் தலை­ந­கர் பெய்­ஜிங்­கி­லும் நிதி நடு­வ­மான ஷாங்­கா­யி­லும் நேற்று முன்­தி­னம் உள்­ளூர் அள­வில் கொவிட்-19 தொற்று பதி­வா­க­வில்லை. பிப்­ர­வரி 19ஆம் தேதிக்­குப் பிறகு இவ்­விரு நகர்­க­ளி­லும் கிரு­மிப் பர­வல் பதி­வா­கா­தது இதுவே முதன்­முறை.

நாடு முழு­வ­தும் 22 பேரி­டம் மட்­டுமே புதி­தாக தொற்று கண்­ட­றி­யப்­பட்­ட­தாக தேசிய சுகா­தார ஆணை­யம் தெரி­வித்­தது.