குளோரின் எரிவாயுக் கசிவு; 12 பேர் மரணம், 251 பேர் காயம்

குளோரின் எரிவாயுக் கசிவு; 12 பேர் மரணம், 251 பேர் காயம்

1 mins read
1d77be9e-7bee-42f3-b486-23a9fafcff28
-

அம்­மான்: ஜோர்­தான் நாட்­டின் அகாபா துறை­மு­கத்­தில் உள்ள சேமிப்­புத் தொட்­டி­யில் இருந்து நேற்று முன்­தி­னம் குளோ­ரின் எரி­வாயு கசிந்­த­தில் குறைந்­தது 12 பேர் உயி­ரி­ழந்­த­னர்; 251 பேர் காயம் அடைந்­த­னர் என்று உள்ளூர் ஊட­கம் தெரி­வித்­தது.

25 டன் குளோ­ரின் எரி­வாயு நிரப்­பப்­பட்டு இருந்த தொட்டி ஒன்று ஜிபவ்ட்டி நாட்­டிற்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­போது எரி­வாயு கசிந்­த­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர். நேற்று செவ்­வாய்க்­கி­ழ­மைக்­குள் ஒரு சிலர் மட்­டுமே மருத்­து­வ­ம­னை­யில் தொடர்ந்து சிகிச்சை பெற நேரி­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக சுகா­தார அமைச்சு அதி­கா­ரி­கள் கூறி­னர்.

இந்­தச் சம்­ப­வத்­தைத் தொடர்ந்து அகாபா துறை­மு­கத்­துக்­குச் சென்று ஜோர்­தான் பிர­த­மர் பிஷர் அல் கசாவ்னே, மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெறு­வோ­ரி­டம் நலன் விசா­ரித்­த­தாக அர­சாங்­கத் தொலைக்­காட்சி தெரி­வித்­தது. ஏரி­வாயு கசிவு குறித்து விசா­ரணை நடத்த அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.