சிங்கப்பூரில் நடைபெறும் பிரசித்திபெற்ற சைக்கிளோட்டப் போட்டி

சிங்கப்பூர்: பிர­சித்­தி­பெற்ற சைக்­கி­ளோட்­டப் போட்­டி­யான டூர் டி பிரான்ஸ், தென்­கி­ழக்­கா­சி­யா­வில் நடத்­தப்­ப­டு­கிறது. இத்­த­கைய 'கிரைட்­டீ­ரி­யம்' போட்­டியை நடத்தும் முதல் ஆசி­யான் நாடாக சிங்­கப்­பூர் விளங்­கும்.

அக்­டோ­பர் 29, 30ஆம் தேதி­களில் நக­ரின் மையப் பகு­தி­யில் இந்­தப் போட்டி நடை­பெ­றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உல­கின் ஆகச் சிறந்த எட்டு சைக்­கி­ளோட்­டக் குழுக்­க­ளைச் சேர்ந்த 32 சைக்­கி­ளோட்­டி­கள் இந்­தப் போட்­டி­யில் கலந்­து­கொள்ள இருக்­கின்­ற­னர். புகழ்­பெற்ற பிரிட்­டிஷ் சைக்­கி­ளோட்­டி­யான மார்க் கேவண்­டிஷ், அவர்­களில் அடங்கு­வார்.

டூர் டி பிரான்ஸ் போட்டி, ஒவ்­வோர் ஆண்­டும் பொது­வாக ஜூலை மாதம் பிரான்­சில் நடத்­தப்­ப­டு­கிறது. 23 நாள்­களில் 21 கட்­டங்­க­ளாக நடை­பெ­றும் இந்தப்­ போட்டி, ஏறக்­கு­றைய 3,500 கிலோ­மீட்­டர் தூரத்தை உள்­ள­டக்­கு­கிறது.

ஒப்­பு­நோக்க, சிறிய அள­வி­ல் நடத்­தப்­படும் கிரைட்­டீ­ரி­யம் போட்­டி­கள், மற்ற நாடு­க­ளி­லும் நடத்­தப்­ப­டு­கின்­றன. இத்­த­கைய போட்­டி­களில் சைக்கி­ளோட்­டி­கள் 30 முதல் 90 நிமி­டங்­களில் குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யி­லான சுற்­று­களை நிறை­வேற்ற வேண்­டும். ஒவ்­வொரு சுற்­றின் நீளம் ஏறக்குறைய 800 மீட்­ட­ருக்கும் 10 கிலோ­மீட்­ட­ருக்­கும் இடைப்­பட்­டி­ருக்­கும்.

தொழில்முறை வீரர்­களும் ஆரம்­ப­நிலை வீரர்­களும் பங்­கெடுக்கும் இந்த 'கிரைட்­டீ­ரி­யம்' போட்­டியை உல­கம் முழு­வ­தும் மில்லி­யன் கணக்­கா­ன ரசிகர்கள் பார்ப்­பார்கள் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!