ஏர் நியூசிலாந்து எகானமி பிரிவில் சாய்ந்து செல்லும் வசதி

ஏர் நியூசிலாந்து எகானமி பிரிவில் சாய்ந்து செல்லும் வசதி

1 mins read
9c52f832-7f97-42a8-8667-d1893ea36000
ஏர் நியூசிலாந்தில் பயணிக்கு எகானமி பயணிகள் இதுபோன்ற அடுக்கு படுக்கைகளில் சாய்ந்து செல்லலாம் (படம்: ஏர் நியூசிலாந்து) -

‌ஏர் நியூசிலாந்து விமானத்தின் எகானமி பிரிவில் பயணம் செய்பவர்கள் இனி வசதியாக படுத்துக்கொண்டு பயணம் செய்யலாம். உலகிலேயே முதல்முறையாக எகானமி பிரிவு பயணிகளுக்கு இந்த வசதி செய்துதரப்படுகிறது.

எகானமி பிரிவில் அடுக்குப் படுக்கைகள் பொருத்தப்படும். இவற்றை நான்கு மணி நேரத்துக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படி பயன்படுத்த விரும்புவோர் இதற்காக முன்பதிவு செய்துகொண்டு கட்டணம் செலுத்தவேண்டும். ஒவ்வொரு படுக்கையிலும் மெத்தை, தலையணை, திரை, மின்னூட்ட வசதி ஆகியவை இருக்கும்.

இந்த வசதியை செய்துதர ஏர் நியூசிலாந்தின் எட்டு போயிங் 787-9 ரக விமானங்களில் ஐந்து எகானமி பிரிவு இருக்கைகள் அகற்றப்படும். அதற்கு பதிலாக அடுக்குப் படுக்கைகள் பொருத்தப்படும். 2024 ஆண்டுக்குள் இந்த வசதி தயாராக இருக்கும் என நிறுவனம் தெரிவித்தது.

ஆக்லாந்துக்கும் நியூயார்க்கும் இடையே பயணிக்கும் விமானங்களில் இந்தச் சேவை அளிக்கப்படும். இவ்விரு நகரங்களுக்கு இடையே பயணம் செய்ய 17 மணி நேரம் எடுக்கும்.

படுக்கைக்கான கட்டணம் குறித்த தகவலை நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் ஒவ்வொரு பயணியும் ஒரு முறை மட்டுமே அதாவது நான்கு மணிநேரம் வரை மட்டும்தான் இந்த படுக்கையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஏர் நியூசிலாந்து நிறுவனம் கூறியது.