கோழிகளின் அதிகபட்ச விலையை உயர்த்தியது மலேசியா

பெட்­டா­லிங் ஜெயா: கோழி­க­ளின் அதி­க­பட்ச விலையை மலே­சியா கிலோ­வுக்கு 9.40 ரிங்­கிட்­டாக ($3) உயர்த்­தி­யுள்­ள­தாக அந்­நாட்­டின் விவ­சா­யம் மற்­றும் உண­வுத்­துறை அமைச்­சர் ரோனல்ட் கியான்டீ நேற்று தெரி­வித்­தார்.

புதிய விலை நாளை முதல் நடப்­புக்கு வரும்.

இதற்கு முன்பு மலே­சி­யத் தீப­கற்­பத்­தில் கோழி­க­ளின் விலை கிலோ­வுக்கு 8.90 ரிங்­கிட்­டாக இருக்­கும் என்று நிர்­ண­யிக்­கப்­

பட்­டி­ருந்­தது.

இந்த அதி­க­பட்ச விலை நாளை அகற்­றப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

உணவு விலை­யேற்­றம் கார­ண­மாக வர்த்­த­கங்­கள் வெகு­வா­கப் பாதிப்­ப­டைந்­ததை அடுத்து, ஜூலை மாதத்­தி­லி­ருந்து கோழிகள், முட்­டை­கள் ஆகி­ய­வற்­றுக்­கான அதி­க­பட்ச விலையை அகற்ற மலே­சிய

அர­சாங்­கம் முன்­ன­தா­கத் தெரி­வித்­தி­ருந்­தது.

மலே­சி­யப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் அறி­வித்த ரொக்க உத­வித் திட்­டத்­தைக் கருத்­தில் கொண்டு இந்த முடிவை அர­சாங்­கம் எடுத்­த­தாக டாக்­டர் கியான்டீ கூறி­னார். அந்­தத் திட்­டத்­தின்­கீழ் தகுதி பெறும் குறைந்த, நடுத்­தர வரு­மா­னக் குடும்­பங்­க­ளுக்­குத் தலா 500 ரிங்­கிட் வழங்­கப்­படும்.

டாக்­டர் கியான்­டீ­யைப் பொறுத்­த­வரை, இது­வரை ஏறத்­தாழ 8.6 மில்­லி­யன் குடும்­பங்­க­ளுக்கு அந்த ரொக்க உத­வித் திட்­டத்தை வழங்க ஒப்­பு­தல் வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாண்டு மட்­டும் தகுதி பெறும் ஒவ்­வொரு குடும்­பத்­துக்­கும் 2,600 ரிங்­கிட் வரை கிடைக்­கும் என்­றார் அவர்.

"இதற்கு முன்பு எந்த ஒரு மலே­சிய அர­சாங்­கமும் இவ்­வ­ளவு பெரிய உத­வித் தொகையை வழங்­கி­ய­தில்லை," என்­றார் டாக்­டர் கியான்டீ. கோழிகள், முட்டைகள் ஆகி­ய­வற்­றின் விலை உயர்வை மலே­சி­யர்­கள் சமா­ளிக்க 369.5 மில்­லி­யன் ரிங்­கிட் ($117 மில்­லி­யன்) ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் தெரி­வித்­தார். மலே­சிய அர­சாங்­கம் கடந்த பிப்­ர­வரி மாதம் 5ஆம் தேதி­யி­லி­ருந்து மொத்­தம் 1.1 பில்­லி­யன் ரிங்கிட் பெறு­மா­ன­முள்ள மானி­யங்­களை வழங்­கி­யுள்­ள­தாக அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!