பேங்காக்: அண்மை வாரங்களாக தாய்லாந்துத் தலைநகரம் பேங்காக்கில் நடத்தப்பட்ட அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களால் வழக்கநிலை பெரிதும் பாதிப்படைந்தது.
இத்தகைய இடையூறுகள் இனி நிகழாதிருக்க அமைதியான முறையில் போராட்டம் நடத்த பேங்காக்கில் ஏழு இடங்கள் ஒதுக்கப்
பட்டுள்ளன.
நாட்டின் நிலைத்தன்மை, பொதுமக்கள் பாதுகாப்பு ஆகியவற்றை நிலைநாட்ட இந்த நடவடிக்கை அவசியம் என்று பேங்காக்கின் புதிய ஆளுநரான சட்சார்ட் சிட்டிபுன்ட் தெரிவித்தார்.
பிரா நக்கோன் மாவட்டத்தில் உள்ள முயேங் டவுன் ஸ்குவேர், டின்டேங் வட்டாரத்தில் உள்ள பேங்காக் இளையர் மையம் உட்பட ஏழு இடங்களில் பொதுமக்கள்
அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் அதிருப்தியைத் தெரியப்
படுத்தலாம் என்று தாய்லாந்து
அரசாங்கம் கூறியது.
இந்த இரண்டு இடங்களும் ஜனநாயகச் சின்னம், வெற்றிச் சின்னம் ஆகிய இரண்டு இடங்களுக்கு அருகில் அமைந்துள்ளன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் இங்கு கூடுவது வழக்கம் என்று
அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட ஏனைய இடங்கள் பேங்காக்கின் மையப் பகுதியிலிருந்து சற்று தூரத்தில் உள்ளன.
திறந்தவெளிகள், விளையாட்டு மைதானங்கள், பூங்கா ஆகியவை அவற்றில் அடங்கும்.
கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகளை தாய்லாந்து தளர்த்தி வரும் நிலையில், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களும்
மீண்டும் தொடங்கியுள்ளன.

