வியன்னா: ஆஸ்திரியாவில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
நிலச்சரிவு காரணமாக மூன்று கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் மண்ணில் புதையுண்டன. இதனால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மீட்புப் பணியாளர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது. காயமுற்றோர், மரணமடைந்தோர் குறித்து தகவல்கள் வெளியிடப் படவில்லை.

