பிரிட்டிஷ் கொலம்பியா: கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா
மாநிலத்தில் உள்ள ஒரு வங்கியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர்கள் இருவரை அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர்.
இதில் ஆறு காவல்துறை அதிகாரிகள் காயமுற்றனர்.
அவர்களுக்குக் குண்டடி
பட்டுள்ளதாகவும் மருத்துவமனையில் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கனடா காவல்துறை தெரிவித்தது.
அவர்களில் சிலர் கவலைக்
கிடமாக இருப்பதாகவும் அவர்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை நடத்தப்படுவதாகவும் காவல்துறை கூறியது.
இந்தச் சம்பவம் சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை
2 மணி அளவில் நிகழ்ந்தது.
வங்கியில் வெடிகுண்டு போல் இருந்த பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் இருந்த வீடுகளில் இருந்தோரை அதி
காரிகள் அங்கிருந்து வெளியேற்றினர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த அவசரகால நடவடிக்கைப் பிரிவு அதிகாரிகள் வங்கியைச் சுற்றி தடுப்பு போட்டனர். சந்தேகத்துக்குரிய பொருளை அதிகாரிகள் சோதனையிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

