பெர்லின்: ஜெர்மனியின் விமானப் போக்குவரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் விமானப் போக்குவரத்து நேற்று வெகு
வாகப் பாதிப்படைந்தது.
பாதிப்படைந்த விமான நிலையங்களில் ஃபிராங்ஃபர்ட் விமான நிலையமும் அடங்கும்.
இதனால் பல விமானச் சேவைகள் தாமதமடைந்தன. சில விமானச் சேவைகளை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
மொத்தம் எத்தனை விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
இதற்குத் தீர்வு காண உடனடி நடவடிக்கை மேற்கொண்ட ஜெர்மன் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் பிரச்சினையைச் சரிசெய்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விமானப் போக்குவரத்து முழுமையாக வழக்கநிலைக்குத் திரும்பிவிட்ட தாக அவர்கள் கூறினர்.

