பிலிப்பீன்ஸ் அதிபராக ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பதவியேற்பு

பிலிப்பீன்ஸ் அதிபராக ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பதவியேற்பு

1 mins read
f3ce5d62-a322-49b0-a50d-a7c9936470aa
படம்: ஏஃபி -

பிலிப்பீன்ஸ் அதிபராக அந்த நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியின் மகன் பதவியேற்றுள்ளார். 64 வயதான ஃபெர்டி­னாண்ட் மார்­கோஸ் ஜூனி­யர் சென்ற மாதம் நடைபெற்ற தேர்தலில் அபார வெற்றி பெற்­றார்.

1986ல் பிலிப்­பீன்­சில் 'மக்­கள் சக்தி' எழுச்சி கண்­ட­போது, மார்­கோஸ் ஜூனி­ய­ரு­டைய தந்­தை­யின் 20 ஆண்­டு­கால சர்வாதிகார ஆட்சி முடி­வுக்கு வந்­தது. பல ஆண்டுகளாக மார்கோஸ் குடும்பத்தினர் ஆட்சியை மீண்டும் பெற போராடிவந்துள்ளனர்.

தலைநகர் மணிலாவில் பதிவியேற்பு நிகழ்ச்சியில் சற்றுமுன் இடம்பெற்றது.

பொருளியல் வளர்ச்சியை ஊக்குவித்தல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், உணவு உற்பத்தியை அதிகரித்தல் ஆகியவை தமது முன்னுரிமைகளாக இருக்கும் என அதிபர் மார்கோஸ் தேர்தல் பிராசாரத்தின்போது வாக்குறுதி அளித்திருந்தார்.