ஜப்பான்: தலிபான் தன் சொந்த மக்களைப் பாதுகாக்க வேண்டும்

ஜப்பான்: தலிபான் தன் சொந்த மக்களைப் பாதுகாக்க வேண்டும்

1 mins read
96d9bbdb-a1e7-4bf0-a63c-6448bd729aaf
-

தோக்­கியோ: அனைத்து நாடு­களின் அர­சாங்­க­ளுக்­கும் தன் மக்­க­ளை­யும் அவர்­க­ளின் வாழ்­வா­தா­ரங்­க­ளை­யும் பாது­காக்க வேண்­டிய கடமை உள்­ளது. அது­போல ஆப்­கா­னிஸ்­தானை ஆட்சி செய்­யும் தலி­பான் இயக்­க­மும் தங்­கள் நாட்­டில் நிக­ழும் மனி­தா­பி­மான நெருக்­க­டியை நிறுத்த வேண்­டும். அதற்கு தலி­பான்­கள் அனைத்­து­லக சமூ­கத்­து­டன் இணைந்து செயல்­பட வேண்­டும் என்று ஜப்­பான் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

ஆப்­கா­னிஸ்­தா­னின் மலை­சார்ந்த பகு­தி­யான கிழக்­குப் பகு­தி­யில் கடந்த ஜூன் 22ஆம் தேதி ஏற்­பட்ட நில­ந­டுக்­கத்­தால் ஆயி­ரத்­திற்கு மேற்­பட்­டோர் பலி­யா­யி­னர். ஏரா­ள­மா­னோர் கடு­மை­யா­கக் காய­ம­டைந்­த­னர்.

நில­ந­டுக்­கத்­தில் வீடு­களை இழந்து தவிப்­போ­ருக்கு அமெ­ரிக்கா, ஜப்­பான் உள்­ளிட்ட பல நாடு­கள், போர்வை, கூடா­ரம் போன்ற நிவா­ர­ணப் பொருட்­களை அனைத்­து­லக தொண்­டூ­ழிய அமைப்­பு­கள் மூலம் அளித்­தன.

இந்­நி­லை­யில் அந்த நிவா­ர­ணப் பொருள்­கள் மக்­களுக்கு முறை­யாக விநி­யோ­கிக்­கப்­பட்­ட­னவா என்­பதை உறு­தி­செய்ய முடி­ய­வில்லை என்று கூறப்­ப­டு­கிறது.