'ரஷ்யாவுக்கு எதிராக சுவீடனும் பின்லாந்தும் நடந்துகொண்டால் தக்க பதிலடி தரப்படும்'

'ரஷ்யாவுக்கு எதிராக சுவீடனும் பின்லாந்தும் நடந்துகொண்டால் தக்க பதிலடி தரப்படும்'

2 mins read
0290bfd2-ab48-43cc-84f8-4eeffda91a3d
-

மாஸ்கோ: உக்­ரேன் ராணு­வத்­திற்கு உதவ நேட்டோ சுவீ­டன், பின்­லாந்­தில் ராணு­வப் கட்­ட­மைப்­பு­களை அமைத்­தல், ராணுவ வீரர்­களை குவித்து, அமெ­ரிக்­கக் கூட்­ட­ணிப் படை­யு­டன் இணைப்­பது போன்ற நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டால், அதற்கு ரஷ்யா தக்க பதி­லடி கொடுக்­கும் என்று ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் நேற்று எச்­ச­ரித்­தார்.

"உக்­ரே­னு­டன் எங்­க­ளுக்கு இருக்­கும் பிரச்­சி­னை­யைப் போல் சுவீ­டன் மற்­றும் பின்­லாந்து ஆகிய நாடு­க­ளு­டன் இல்லை. சுவீ­ட­னும் பின்­லாந்­தும் நேட்­டோ­வில் இணை­வது என்­பது அவர்­கள் விருப்­பம். அதற்கு நாங்­கள் எவ்­வி­தத் தடை­யும் சொல்­ல­வில்லை.

இந்த நாடு­க­ளுக்கு ரஷ்யா, முன்­பும் இப்­போ­தும் எவ்­வி­தத்­தி­லும் அச்­சு­றுத்­த­லாக இல்லை என்­பதை அவர்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும்.

ரஷ்­யா­வுக்கு எதி­ராக அந்த நாடு­களில் ராணு­வத் தள­மும் கட்­ட­மைப்­பு­மும் அமைக்­கப்­பட்­டால் நாங்­கள் வேடிக்கை பார்த்­துக்­கொண்டு இருக்க மாட்­டோம்.

"எங்­க­ளுக்கு எவ்­வா­றான அச்­சு­றுத்­தலை அந்த நாடு­கள் ஏற்­படுத்­து­கின்­ற­னவோ, அதே­போன்ற அச்­சு­றுத்­தலை ரஷ்­யா­வும் ஏற்­ப­டுத்­தும்," என்று ரஷ்ய அதி­பர் புட்­டின் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

துர்க்­மே­னிஸ்­தா­னில் மத்­திய ஆசி­யத் தலை­வர்­க­ளின் சந்­திப்­புக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்ட பிறகு, ரஷ்­யா­வின் அர­சாங்­கத் தொலைக்­காட்­சி­யில் ஆற்­றிய உரை­யில் இவ்­வாறு புட்­டின் தெரி­வித்­தார்.

சுவீ­டன், பின்­லாந்து ஆகிய நாடு­க­ளு­ட­னான ரஷ்­யா­வின் உறவு இது­வ­ரை­யி­லும் எவ்­வி­தப் பிரச்­சி­னை­யும் இன்றி சுமூ­க­மா­கவே இருந்­து­வந்­துள்­ளது.

ஆனால் இப்­போது, நேட்டோ உறுப்­பி­யத்­தால் இந்த நாடு­க­ளு­ட­னான உற­வில் விரி­சல் ஏற்­பட்­டுள்­ளது. அத­னை­ய­டுத்து பதற்­ற­மான சூழலே உரு­வா­கி­யுள்­ளது என்­பதை மறுக்­க­மு­டி­யாது என்று கூறி­யுள்­ளார்.

உக்­ரே­னில் ரஷ்யா அதன் சிறப்பு ராணுவ நட­வ­டிக்­கை­யில் எவ்­வித மாற்­ற­மும் செய்­யப்­போ­வ­தில்லை. உக்­ரே­னின் கிழக்­குப் பகு­தி­யில் டோன்­பாஸ் வட்­டா­ரத்­திற்கு சுதந்­தி­ரம் அளிப்­பதே மாஸ்­கோ­வின் இலக்கு. அதே­வே­ளை­யில் ரஷ்­யா­வின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தல் ஏற்­ப­டாத சூழ­லை­யும் மாஸ்கோ ஏற்­ப­டுத்­தும் என்­றும் கூறி­யுள்­ளார்.

ரஷ்­யப் படை­கள் முன்­ன­தாக திட்­ட­மிட்­ட­படி உக்­ரே­னில் முன்­னே­றிச்­செல்­கிறது. அதே­வே­ளை­யில் ரஷ்­யா­வின் ராணுவ நட­வ­டிக்­கையை நிறுத்­து­வ­தற்­கான தேவை­யும் ஏற்­ப­ட­வில்லை என்று கூறி­னார்.