ஃபிலடெல்ஃபியாவில் துப்பாக்கிச்சூடு

ஃபிலடெல்ஃபியாவில் துப்பாக்கிச்சூடு

1 mins read
830ab10a-af52-4dda-ba0a-f94e00fe9277
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோது ஓடிச் செல்லும் மக்கள். படம்: டைலர் டூட்ரிக்கின் டுவிட்டவர் பக்கம் / டுவிட்டர் -
Google News Preferred Icon

அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று மேலும் ஒரு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜூலை நான்காம் தேதி அமெரிக்காவின் சுதந்திர தினம்.

ஃபிலடெல்ஃபியா நகரில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுடப்பட்டனர்.

'பெஞ்சமின் ஃபிராங்க்லின் பார்க்வே' பகுதியில் சம்பவம் நிகழ்ந்தது.

சுதந்திர தினத்தைக் கொண்டாட ஆயிரக்கணக்கானோர் இசைக் கச்சேறி ஒன்றில் கலந்துகொண்டபோது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

உள்ளூர் ஊடகங்களும் அதைத் தெரிவித்தன.

சுடப்பட்ட இரு காவல்துறை அதிகாரிகளின் நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.