ஜி-20 சந்திப்பில் ரஷ்யா

நுசா டுவா (இந்­தோ­னீ­சியா): சுற்­றுப்­ப­ய­ணி­க­ளி­டையே பிர­ப­ல­மாக இருக்­கும் இந்­தோ­னீ­சி­யா­வின் பாலி தீவில் நடை­பெ­றும் ஜி-20 கூட்­ட­மைப்பு நாடு­கள் பங்­கேற்­கும் சந்­திப்­பில் ரஷ்யா கலந்­து­கொள்­கிறது.

வெளி­யு­றவு அமைச்­சர்­கள் பங்­கேற்­கும் இந்த சந்­திப்­பில் ரஷ்­யா­வின் வெளி­யு­றவு அமைச்­சர் சர்­ஹெய் லவ்­ரோவ் கலந்­து­கொள்­கி­றார். உக்­ரேன் போரை மைய­மா­கக் கொண்டு சந்­திப்பு நடை­பெ­றும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

உக்­ரேன் போரால் உல­கில் உணவு நெருக்­கடி நிலவி வரு­கிறது. உலக அர­சி­யல் சூழ­லி­லும் நெருக்­கடி எழுந்­துள்­ளது.

இப்­ப­டிப்­பட்ட நிலை­யில் அவற்­றின் தொடர்­பில் பல்­வேறு அம்­சங்­களைக் கருத்­தில்­கொண்டு சந்­திப்பை சீராக நடத்­தும் சவாலை இந்­தோ­னீ­சியா எதிர்­நோக்­கு­கிறது.

உக்­ரேன் மீது படை­யெ­டுத்­த­தன் தொடர்­பில் இந்த சந்­திப்பை ரஷ்யா சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளக்­கூ­டாது என்று ஜெர்­ம­னி­யின் வெளி­யு­றவு அமைச்­சர் என­லீனா பெர்­பொக் கூறி­யி­ருந்­தார். அனைத்­து­லக சட்­டங்­களை மதிப்­ப­து­டன் அனை­வ­ரும் அவற்­றுக்கு இணங்க நடந்­து­கொள்­வதை உறு­தி­செய்­ய­வேண்­டும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

உக்­ரேன் மீது ரஷ்யா படை­யெ­டுத்­த­தற்­குப் பிறகு திரு லவ்­ரோவ் பல­ரின் கண்­ட­னத்­திற்கு ஆளா­னார். கண்­ட­னம் தெரி­வித்த பலரை அவர் முதன்­மு­றை­யாக நேரில் சந்­திக்­கி­றார்.

இதற்கு முன்பு நடை­பெற்ற சந்­திப்­பு­க­ளைப் போல் பாலி­யில் நடை­பெ­று­வது இருக்­காது என்று ஐரோப்­பிய, அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் சிலர் கூறி­யி­ருந்­த­னர்.

ஜி-20 சந்­திப்­பில் ரஷ்யா பங்­கேற்­ப­தால் அதில் தாங்­கள் கலந்­து­கொள்­ளா­மல் இருக்­கக்­கூ­டும் என்று மேற்­கத்­திய நாடு­கள் கூறி வந்­தன. ஆனால் அதுவே ரஷ்­யா­விற்கு சாத­க­மாக அமை­யக்­கூ­டும் சாத்­தி­யம் இருந்­த­தால் மேற்­கத்­திய நாடு­கள் பங்­கேற்க முடிவு செய்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

எரி­சக்தி, உண­வுப் பாது­காப்பு குறித்­தும் சந்­திப்­பில் முக்­கி­ய­மா­கப் பேசப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

இந்த இரண்டு நாள் ஜி-20 சந்­திப்பு இன்றுடன் நிறை­வ­டை­யும்.

பாலியில் நடைபெறும் சந்திப்பு உக்ரேன் விவகாரத்தை மையமாகக் கொண்டிருக்கும்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!