அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் பிரபல சமூக வலைத்தளமான 'டிக்டாக்' மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மயக்கமடைவதற்காக 'பிளேக்கவுட் சேலஞ்' எனும் மூச்சடைப்பு சவாலில் பங்கேற்ற சிறுவர்கள் மாண்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் மூச்சடைப்பு சவாலைப் பிரபலப்படுத்தி அதில் பிறரைப் பங்கேற்கச் செய்வதாகக் கூறி 'டிக்டாக்' மீது கலிஃபோர்னியாவின் தலைநகர் லாஸ் ஏஞ்சலீசில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த சவாலில் பங்கேற்ற அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள ஓர் எட்டு வயது சிறுமியும் விஸ்கொன்சின் மாநிலத்தில் உள்ள ஓர் ஒன்பது வயது சிறுமியும் சென்ற ஆண்டு உயிரிழந்தனர்.

