விலகும் மஸ்க்; வழக்கு தொடர தயாராகும் டுவிட்டர்

விலகும் மஸ்க்; வழக்கு தொடர தயாராகும் டுவிட்டர்

1 mins read
44b67302-aa45-4a25-98ed-af82ba6b4d7b
-

வா‌ஷிங்­டன்: டுவிட்­டர் சமூக ஊடகத்தை வாங்­கும் ஒப்­பந்­தத்­தில் இருந்து எலான் மஸ்க் பின்­வாங்­கி­யுள்­ள­தைத் தொடர்ந்து அவர்­மீது வழக்­குத் தொட­ரப்­போ­வ­தாக அறி­வித்­து உள்ளது டுவிட்­டர் நிர்­வா­கம்.

அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, 'டெஸ்லா' நிறு­வ­னத்­தின் தலை­வ­ரான எலான் மஸ்க், டுவிட்­டர் சமூக வலைத்­த­ளத்தை 44 பில்­லி­யன் அமெ­ரிக்க டால­ருக்கு வாங்­கு­வ­தாக சில வாரங்­கள் முன் அறி­வித்­தார்.

எனி­னும் டுவிட்­ட­ரில் உள்ள போலிக் கணக்­கு­கள் 5 விழுக்­காட்­டிற்­கும் குறை­வாக இருந்­தால் மட்­டுமே டுவிட்­டரை வாங்­கு­வேன் என்­றும் சில நிபந்­த­னை­களை அவர் அறி­வித்­தார்.

இச்­சூ­ழ­லில் போலி கணக்­கு­கள் பற்­றிய தக­வல்­களை டுவிட்­டர் வழங்­கத் தவ­றி­ய­தால் தமது ஒப்­பந்­தத்தை நிறுத்­து­வ­தாக மஸ்க் அறி­வித்­துள்­ளார்.

எலான் மஸ்க்­கின் இந்த அறி­விப்­பால் டுவிட்­டர் நிறு­வ­னத்­தின் பங்­கு­கள் சரி­யத் தொடங்­கி­யுள்­ளன.

இதை­ய­டுத்து டுவிட்­டர் நிறு­வனம் மஸ்க்­மீது வழக்­குத் தொட­ரப்­போ­வ­தாக அறி­வித்­துள்­ளது.

இது­கு­றித்து டுவிட்­டர் நிர்­வா­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், "முன்­ன­தாக போடப்­பட்ட ஒப்­பந்த விதி­மு­றை­க­ளின்­படி ஒப்­பந்­தத்தை முடிக்­க­வில்லை என்­றால் எலான் மஸ்க் ஒரு பில்­லி­யன் டாலர் செலுத்­த­வேண்­டும். இந்த சட்­டப் போராட்­டத்­தில் நாங்­கள் வெற்றி பெறு­வோம்,'' என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.