ஜோகூரில் வாகன பாகங்கள் திருட்டு

ஜோகூரில் வாகன பாகங்கள் திருட்டு

1 mins read
4de9bb95-ae0e-49d8-8c6f-4bf4b9e248c9
-

ஜோகூர் பாரூ: ஜோகூர் பாரூவில் உள்ள ஒரு கடைத்தொகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிங்கப்பூர் வாகனத்தின் முக்கிய பாகங்கள் திருட்டுபோயின.

கேஎஸ்எல் கடைத்தொகுதியின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த வாகனத்தின் சக்கரங்களும் முக்கிய சக்கர பாகங்களும் திருடப்பட்டன.

சக்கரங்கள் அகற்றப்பட்ட நிலையில் உள்ள வாகனத்தை காட்டும் காணொளி டிக்டாக் தளத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

காணொளியைக் கண்ட பல சிங்கப்பூரர்கள் தாங்கள் இந்தக் கடைத்தொகுதிக்கு அடிக்கடி செல்வதாகக் குறிப்பிட்டனர். ஆனால் இதுவரை தங்களுக்கு எந்தவோர் அசம்பாவிதமும் நடந்ததில்லை என்று அவர்கள் கூறினர்.