ஷின்ஸோ அபேக்கு பிரியாவிடை

1 mins read
4843f6a1-bd78-441a-951a-fe98dcc33057
படம்: ராய்ட்டர்ஸ், புளூம்பெர்க் -
multi-img1 of 3

மறைந்த முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கு இன்று தோக்கியோவில் நடந்தது. திரு அபேக்கு மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் கூடினர். பலரும் கறுப்பு ஆடையில் வந்திருந்தனர். திரு அபேயின் நல்லுடல் ஏந்திய வாகனம் ஆலயத்திலிருந்து கிளம்பும்போது, பலர் கைதட்டி, மலர்கள் தூவினர்.

திரு அபே பிரதமராக இருந்தபோது நாட்டில் பாதுகாப்பு இருந்தது. அவர் இப்போது இல்லாதது எங்களுக்கு வருத்தமாக இருப்பதாக இறுதி மரியாதை செலுத்த வந்த ஒருவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற மேலவைத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) அன்று பேசிக்கொண்டிருந்த திரு அபே சுடப்பட்டார்.

ஜப்பானில் ஆக அதிக காலம் பிரதமர் பதவியில் இருந்தவர் திரு அபே.