சிங்கப்பூர்: திரு ஷின்சோ அபேக்கு மரியாதை செலுத்த சிங்கப்பூருக்கான ஜப்பானிய தூதர் ஜுன் யாமாஸாக்கியை அவரின் இல்லத்தில் சந்தித்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங். திரு அபேக்கு அனுதாபங்களைத் தெரிவிக்கும் புத்தகத்தில் கையெழுத்திட்டு திரு லீயும் அவரின் மனைவியும் மரியாதை செலுத்தினர்.
திரு அபே, சிங்கப்பூரின் நல்ல நண்பர் என்று திரு லீ சென்ற வாரம் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார்.
மேலும், சிங்கப்பூரில் உள்ள 'ஜேசிசி' எனும் ஜப்பான் படைப்பாக்க நிலையத்திற்குச் சென்று மக்கள் பலர் திரு அபேக்கு மரியாதை செலுத்தினர். பொதுமக்கள் கையெழுத்திட ஓர் அனுதாபப் புத்தகத்தை சிங்கப்பூரின் ஜப்பானிய தூதரகம் அந்நிலையத்தில் வைத்தது. சுமார் 400 பேர் நிலையத்திற்கு வருகை தந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

