விளையாட்டுத் துளிகள்

விளையாட்டுத் துளிகள்

1 mins read
1134fd4f-4aca-4883-9dbf-6d356bd2d7a5
-

ஒலிம்பிக்கில் ரஷ்ய, பெலருஸ் வீரர்கள் தடை செய்யப்படலாம்

பாரிஸ்: பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் நடைபெறவுள்ள அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் ரஷ்யா, பெலரூஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தடைசெய்யப்படக்கூடும். ரஷ்யா உக்ரேனைப் படையெடுத்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் மூத்த உறுப்பினர் கிரெய்க் ரீடி தெரிவித்தார்.

ரஷ்ய படையெடுப்புக்கு பெலருஸ் ஆதரவாக இருந்து வந்துள்ளது. இவ்விரு நாடுகளின் தொடர்பிலும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று திரு ரீடி பிரிட்டிஷ் ஊடகங்களிடம் கூறினார். அநேகமாக அவற்றின் வீரர்கள் தடைசெய்யப்படுவர் எனத் தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் கிறிஸ்டல் பேலஸ்

சிங்கப்பூர்: இங்கிலிஷ் பிரிமியர் லிக் காற்பந்து அணியான கிறிஸ்டல் பேலஸ் சிங்கப்பூருக்கு வந்துள்ளது. அணியினரைக் காண பீச் ரோட்டில் உள்ள 'ஜேடபிள்யு மேரியட்' ஹோட்டலில் ரசிகர்கள் பலர் நேற்று திரண்டனர்.

காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தாலும் உற்சாகத்துடன் கிறிஸ்டல் பேலஸ் நிர்வாகி பேட்ரிக் வியேராவைச் சந்தித்து ஆனந்தமடைந்தார் காற்பந்து ரசிகர் முகம்மது மிக்காயல் (படத்தில் சக்கர நாற்பாலியில் இருக்கும் ஆடவர், அவருக்கு அருகே இருப்பவர் வியேரா). வியேரா, ஒரு காலத்தில் அபாரமான விளையாட்டாளரும்கூட.

சிங்கப்பூரில் நடைபெறவுள்ள 'ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் சிங்கப்பூர் கிண்ணம் 2022' எனும் நட்புமுறைப் போட்டியில் பங்கேற்க கிறிஸ்டல் பேலஸ் அணி சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளது.