மனிதவளப் பற்றாக்குறையால் தவிக்கும் நியூசிலாந்து

மனிதவளப் பற்றாக்குறையால் தவிக்கும் நியூசிலாந்து

1 mins read
3aaa64ef-e12f-4961-8dae-1f35cb482bb0
-

வெல்­லிங்­டன்: நியூ­சி­லாந்­தில் கடு­மை­யான எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு வரு­வ­தைத் தொடர்ந்து அந்­நாட்­டி­னர் பலர் வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்று வேலை தேடும் முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ள­னர். அத­னால் ஏற்­கெ­னவே பிரச்­சி­னை­க­ளைச் சந்­தித்த நியூ­சிலாந்­தின் வேலைச் சந்தை மேலும் சவால்­களை எதிர்­நோக்கி வரு­கிறது.

கடந்த மே மாதத்­திற்கு முன்பு ஓராண்டு காலத்­தில் 10,674 பேர் அந்­நாட்­டை­விட்டு வெளி­யே­றி­விட்­ட­னர்.

அடுத்த ஆண்டு அதிக எண்­ணிக்­கை­யில் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் நியூ­சி­லாந்­துக்கு வருகை தரு­வர் எனக் கணிக்­கப்­பட்­டுள்­ளது. அது­வரை அதி­க­மா­னோர் தொடர்ந்து நாட்­டி­லி­ருந்து வெளி­யே­று­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வேலைக்கு ஆள்­சேர்க்க நியூ­சி­லாந்து சிர­மப்­பட்டு வரு­கிறது. அந்­நாட்­டில் வெளி­நாட்டு ஊழி­யர்­களின் எண்­ணிக்­கை­யும் மிக­வும் குறைவு. மேலும், நியூ­சி­லாந்­தில் பண­வீக்­கம் மோச­ம­டை­யா­மல் இருக்க இனி அதி­க­மா­னோரை வேலைக்கு எடுக்­க­மு­டி­யாத நிலை­யும் உரு­வா­கி­யுள்­ளது.