'கேம்பிரிட்ஜ்' மரணங்கள்: விசாரணை தொடக்கம்

'கேம்பிரிட்ஜ்' மரணங்கள்: விசாரணை தொடக்கம்

1 mins read
11b5fa82-3b34-4b96-be1e-d3b8431fccb2
800 ஆண்டுகள் பழைமையான பிரிட்டனின் உலகப் பிரபல 'கேம்பிரிட்ஜ்' பல்கலைக் கழகம்.படம்: நியூயார்க் டைம்ஸ் -

லண்­டன்: பிரிட்­ட­னின் பிர­பல 'கேம்­பி­ரிட்ஸ்' பல்­க­லைக் கழ­கத்­தில் சில மாண­வர்­கள் மர­ண­ம­டைந்­த­தைத் தொடர்ந்து விசா­ரணை தொடங்­கப்­பட்­டுள்­ளது. விசா­ர­ணையை 'கேம்­பி­ரிட்ஜ்' மேற்­கொள்­கிறது.

கடந்த மார்ச் மாதத்­தி­லி­ருந்து இந்­தப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் ஐந்து மாண­வர்­கள் மாண்­டு­விட்­ட­னர். அவர்­களில் ஒரு­வர் தனது உயிரை மாய்த்­துக்­கொண்­டது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இதர நால்­வரும் அவ்வாறு செய்திருக்கக்கூடும் ­என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­வ­தாக பல்­க­லைக் கழ­கத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

நான்­கா­வது மர­ணம் கடந்த மே மாதம் இடம்­பெற்­றது. அதற்­குப் பிறகு பிரிட்­ட­னின் தேசிய சுகா­தார சேவை­யு­டன் இணைந்து விசா­ரணை மேற்­கொள்ள 'கேம்­பி­ரிட்ஜ்', குழு ஒன்றை நிய­மித்­தது.

மாண­வர்­க­ளின் அடை­யா­ளத்­தைப் பாது­காக்க விசா­ரணை குறித்து அதிக தக­வல் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. எனி­னும், அந்த நான்கு மர­ணங்­க­ளுக்­கும் தொடர்­பி­ருந்­த­தா­கத் தெரி­ய­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அந்த விசா­ரணை தொடங்­கிய பிறகு சென்ற மாதம் மேலும் ஒரு மாண­வர் மர­ண­ம­டைந்­தார். கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வ­லால் மன­ந­லப் பிரச்­சி­னை­கள் வர­லாறு காணாத அள­வில் எழுந்துள்ளன. அத­னால் மாண­வர்­க­ளின் மர­ணத்­திற்­கான கார­ணங்­களை அறி­வது சிர­மம் எனச் சொல்­லப்­ப­டு­கிறது.