ஒரே நேரத்தில் கொவிட்-19, சளிக்காய்ச்சல் இரண்டுக்கும் ஆளாகலாம்

ஒரே நேரத்தில் கொவிட்-19, சளிக்காய்ச்சல் இரண்டுக்கும் ஆளாகலாம்

1 mins read
0a4d7e3b-dffd-4ac6-879b-591abac127a7
-

பெட்­டா­லிங் ஜெயா: ஒரே நேரத்­தில் கொவிட்-19, சளிக்­காய்ச்­சல் இரு வகை­ கிரு­மித்­தொற்­றுக்­கும் ஒரு­வர் ஆளா­க­லாம் என்று மலே­சி­யா­வின் சுகா­தார வல்­லு­நர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். அவ்­வாறு நேர்ந்­தால் அது உயி­ருக்கு ஆபத்து விளை­விக்­கக்­கூ­டும் என்­றும் அவர்­கள் எச்­ச­ரித்­த­னர்.

சளிக்­காய்ச்­சல், கொவிட்-19 ஆகிய இரண்­டுக்­கும் வித்­தி­யா­சத்தை அறி­வது சிர­மம். மருத்­து­வப் பரி­சோ­த­னை­க­ளின் மூலம்­தான் தெரிந்­து­கொள்­ள­மு­டி­யும் என்று வல்­லு­நர்­கள் கூறி­னர்.

இரு­வகை கிரு­மித்­தொற்­றும் ஒரே நேரத்­தில் ஏற்­ப­டும்­போது அதற்­குப் பெயர் 'ஃப்ளூரோனா'. அது நிகழ்­வது அரி­தா­னா­லும் நிக­ழாது எனச் சொல்­ல­மு­டி­யா­தென வல்­லு­நர்­கள் குறிப்­பிட்­ட­னர். இம்மாதம் மூன்று, ஒன்­ப­தாம் தேதிக்கு இடைப்­பட்ட காலத்­தில் மலே­சி­யா­வில் சளிக்­காய்ச்­ச­லுக்கு ஆளா­னோ­ரின் எண்­ணிக்கை அதற்கு முந்­தைய வாரத்­தில் பதி­வா­ன­தை­விட 10.7 விழுக்­காடு அதி­க­ரித்­தது.