ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதியில் தாக்குதல், எழுவர் மரணம்

ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதியில் தாக்குதல், எழுவர் மரணம்

1 mins read
d0d00134-dca1-4c37-8a8e-5869e8f22b97
-

மாஸ்கோ: ரஷ்­யா­வின் கட்­டுப்­பாட்­டில் உள்ள உக்­ரே­னின் நோவா காக்­கோவா பகு­தி­யில் உக்ரேன் மேற்­கொண்ட ஏவு­க­ணைத் தாக்­கு­த­லில் குறைந்­தது ஏழு பேர் மாண்­ட­தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 70 பேர் காய­ம­டைந்­துள்­ள­னர்.

அந்­ந­க­ரில் ரஷ்­யா­வால் நிய­மிக்­கப்­பட்­ட அர­சாங்கம் இந்த தக­வல்­களைத் தெரி­வித்­த­து.

உக்­ரே­னின் தெற்­குப் பகு­தி­யில் உள்ள கெர்­சன் நக­ரில் நோவா காக்­கோவா இருக்­கிறது. அங்கு ஆயுதங்­கள் வைக்­கப்­பட்­டிருந்த கிடங்கை உக்­ரேன் அழித்­ததாக அந்­நாட்டு அதி­கா­ரி­கள் தெரி­வித்­தனர்.

கடந்த பிப்­ர­வரி மாதம் 24ஆம் தேதி­யன்று உக்­ரேன் மீது ரஷ்யா படை­யெ­டுத்­த­தைத் தொடர்ந்து ஆயிரக்­க­ணக்­கா­னோர் மாண்­டு­விட்டனர்.