லண்டன்: வரும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதியன்று பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்பது அறிவிக்கப்படும்.
பிரதமர் பதவியிலிருந்து விலகும் போரிஸ் ஜான்சனின் இடத்தைப் பிடிக்க இதுவரை 11 பேர் முன்வந்துள்ளனர். அவர்களில் இந்தியாவின் இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் தொடங்கிய திரு நாராயணமூர்த்தியின் மருமகனான திரு ரிஷி சுனக்கும் ஒருவர்.
பிரதமரைத் தெரிவுசெய்வதற்கான அரசியல் தலைவர்களிடையே நடைபெறவிருக்கும் வாக்களிப்பின் முதல் சுற்று இன்று நடைபெறும். அதில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் குறைந்தது 20 நியமனங்களைப் பெற்றால்தான் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறமுடியும்.

