பிஷ்கெக் : கிர்கிஸ்தானின் தியான் ஷென் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் இருந்து பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று உயிர் தப்பிய பரபரப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
பனிசரிவு காட்சிகள் கிர்கிஸ்தானுக்கு தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்ற சுற்றுலாப் பயணிகளில் ஒருவரான ஹாரி ஷிம்மின் தான், தான் படம் பிடித்த பனிசரிவு காட்சிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே உலக அளவில் அது வேகமாகப் பரவி வருகிறது.

