ஒப்பந்தத்தை மீறி டுவிட்டரை வாங்க மறுத்த எலான் மஸ்க் மீது வழக்கு

ஒப்பந்தத்தை மீறி டுவிட்டரை வாங்க மறுத்த எலான் மஸ்க் மீது வழக்கு

1 mins read
655ca145-9f02-4306-983a-754d8b381a81
எலான் மஸ்க்கின் டுவிட்டர் கணக்கைக் காண்பிக்கும் கைபேசி, பின்னால் அவரது படம்: படம்: ஏஎஃப்பி -

வாஷிங்டன்: டுவிட்டரை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ரத்து செய்ததால் அவர் மீது டுவிட்டர் சமூக வலைத்தள நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

பெறும் பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான டுவிட்டரை வாங்குவதாக முன்னதால அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து டுவிட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (ரூ.3.4 லட்சம் கோடி) எலான் மஸ்க் வாங்க கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதற்கிடையே டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத கணக்குகள் உள்ளிட்ட சில விவரங்களை தரும்படி எலான் மஸ்க் டுவிட்டரிடம் கேட்டார். ஆனால் அந்த விவரங்களை தர மறுத்ததால் டுவிட்டர் நிர்வாகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கைவிடுவதாக கடந்த 9ம் தேதி எலான் மஸ்க் அறிவித்தார்.