மலேசியாவிற்கு ஊழியர்களை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்தியது இந்தோனீசியா

மலேசியாவிற்கு ஊழியர்களை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்தியது இந்தோனீசியா

1 mins read
22a5f3ba-100d-47c2-992f-54be4a2a98a3
-

கோலா­லம்­பூர்: தன்னாட்டு மக்­களை வேலைக்காக மலே­சியா அனுப்­பு­வ­தைத் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைத்­துள்­ள­தாக இந்­தோ­னீ­சியா தெரி­வித்­துள்­ளது. எனவே, மலே­சி­யா­வின் தோட்டத்­து­றைக்கு ஏற்­கெ­னவே நிய­ம­னம் பெற்­றி­ருந்த ஆயி­ரக்­க­ணக்­கான இந்­தோ­னீ­சி­யர்­களும் அங்கு செல்ல­மு­டி­யாது.

ஆள்­சேர்ப்பு ஒப்­பந்­தத்­தில் நடந்த விதி­மீ­றல் கார­ண­மாக இந்த முடிவை எடுத்­துள்­ள­தாக இந்­தோ­னீ­சியா சொன்­னது.

செம்­பனை எண்­ணெய் ஏற்­று­ம­தி­யில் உல­கின் இரண்­டா­வது பெரிய நாடான மலே­சி­யா­வில் ஏற்­கெ­னவே ஆள் பற்­றாக்­குறை நில­வும் வேளை­யில் இந்­தோ­னீ­சி­யா­வின் இந்த முடிவு அதற்­குப் பலத்த அடி­யாக இருக்­கும் என்­றும் அதன் பொருளியல் மீட்சி பாதிக்­கப்­படும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

மலே­சி­யா­வில் கிட்­டத்­தட்ட 1.2 மில்­லி­யன் ஊழி­யர்­க­ளுக்­குப் பற்­றாக்­குறை உள்­ளது.

"இல்லப் பணி­யா­ளர்­க­ளுக்­கான இணைய வழி ஆள்­சேர்ப்பு முறையை மலே­சிய குடி­நு­ழைவு அதி­கா­ரி­கள் தொடர்ந்து பயன்­ப­டுத்­தினர். அது ஆள்­க­டத்­தல், கட்­டாய பணி போன்ற குற்­றச்­சாட்­டு­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­து," என்­று மலே­சி­யா­வுக்­கான இந்­தோ­னீ­சி­யத் தூதர் ஹெர்­மோனோ ராய்ட்­டர்­சி­டம் சொன்னார்.

இந்­தோ­னீ­சி­யப் பணி­யா­ளர்­களுக்­கான பாது­காப்பை மேம்­ப­டுத்­தும் வகை­யில் சென்ற ஏப்­ரல் மாதம் மலே­சியா-இந்­தோ­னீ­சியா இடையே கையெ­ழுத்­தான ஒப்­பந்­தத்தை அது மீறி­ய­தா­கும் என்­றும் அவர் சொன்­னார்.

மலே­சிய மனி­த­வள அமைச்­சர் சர­வ­ண­னும் இந்­தோ­னீ­சி­யா­வின் இந்த அறி­விப்பை உறு­திப்­ப­டுத்­தி­னார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­களை எடுப்­ப­தற்­காக மலே­சிய நிறு­வ­னங்­கள் கிட்­டத்­தட்ட 20,000 விண்­ணப்­பங்­க­ளைச் சமர்ப்­பித்­துள்­ளன. அவற்­றில் பாதி தோட்­டத்­து­றைக்­கா­னது.