விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட்: பும்ராவின் ‌சூறாவளியில் சுருண்டது இங்கிலாந்து

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் அசத்தலான பந்துவீச்சால் விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததோடு, அடுத்து பந்தடிக்கத் தொடங்கிய இந்தியாவின் ரோகித் சா்மா-ஷிகா் தவான் கூட்டணி விக்கெட்டை இழக்காமல் அட்டகாசமாக ஆடி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெல்வதும், சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்பதும் இதுவே முதல் முறை.

முன்னதாக, பூவா தலையாவில் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பும்ரா 7.2 ஓவர்கள் வீசி

19 ஓவர்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் 110 ஓட்டங்களுக்கு இங்கிலாந்து அணி சுருண்டது. அடுத்து பந்தடித்த இந்திய அணி, 18.4 ஓவரில் 114 ஓட்டங்களை எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா 76 ஓட்டங்களும் ஷிகர் தவான் 31 ஓட்டங்களும் எடுத்தனர். பும்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

உலகக் கிண்ணம்: தென்னாப்பிரிக்கா தகுதி பெறுவது கேள்விக்குறி

ஜோகன்னஸ்பர்க்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை தென்னாப்பிரிக்கா ரத்து செய்துள்ளது. இதனால் அந்த அணி 2023 உலகக் கிண்ணப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வரும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஆஸ்திரேலியா வுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவிருந்தது தென்னாப்பிரிக்க அணி.

‌ஏறத்தாழ அதே சமயத்தில், தென்னாப்பிரிக்கா 20 ஓவர் லீக் தொடரை நடத்தவுள்ளது. இதற்காக ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை என தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.

எனவே, 3 ஆட்டங்களுக்கான புள்ளிகளும் ஆஸ்திரேலியாவுக்கு வழங்கப்படுகிறது. இது தென்னாப்பிரிக்க அணி உலகக் கிண்ணப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஒருநாள் சூப்பர் லீக் புள்ளிகள் பட்டியலில் தென்னாப்பிரிக்க அணி ஏற்கெனவே 11ஆம் இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் முதல் 8 அணிகள் மட்டுமே நேரடியாகத் தகுதி பெறும். மீதமுள்ள 2 இடங்களுக்கு தகுதிச்சுற்றின் அடிப்படையில் அணிகள் தேர்வு செய்யப்படும்.

லிவர்பூலை வீழ்த்தியது மேன்யூ

பேங்காக்: தாய்லாந்தின் பேங்காக் நகரில் நடைபெற்ற நட்புமுறை காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் குழு 4-0 என்ற கோல்கணக்கில் லிவர்பூலை வீழ்த்தியது.

மேன்யூ நிர்வாகியாகப் பொறுப்பேற்ற எரிக் டென் ஹாக் தமது முதல் ஆட்டத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

முற்பாதி ஆட்டத்திலேயே மூன்று கோல்களைப் போட்டு விட்டது மேன்யூ. சான்சோவைத் தொடர்ந்து, ஃபிரெட், ஆண்டனி மார்சியால் ஆகியோர் கோல் போட்டனர். உருகுவே வீரர் பெலிஸ்ட்ரி இன்னொரு கோலைப் போட்டார்.

இருதரப்பிலும் நட்சத்திர வீரர்கள் இல்லையென்றாலும் லிவர்பூல் குழு தற்காப்பு ஆட்டத்தில் கோட்டைவிட்டுவிட்டது.

சிங்கப்பூர் வந்திறங்கியது லிவர்பூல் குழு

இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் முன்னணி குழுவான லிவர்பூல் காற்பந்துக் குழுவினர் நேற்று காலை 10 மணிக்கு சிங்கப்பூர் வந்தடைந்தனர். தங்களது கனவுக் குழுவின் நட்சத்திரங் களைக் காண கிட்டத்தட்ட 300 ரசிகர்கள் அங்கு திரண்டிருந்தனர். ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் சிங்கப்பூர் கிண்ணப் போட்டியில் கிரிஸ்டல் பேலசை நாளை எதிர்கொள்ளவுள்ளது லிவர்பூல். மேலே உள்ள படம் லிவர்பூல் காற்பந்துக் குழுவின் நட்சத்திரம் ரொபர்ட்டோ ஃபர்மினோ, சிங்கப்பூரின் ரிட்ஸ்-கார்ல்டன் தங்குவிடுதியில் வந்திறங்கியதைக் காட்டுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!