அபேயைச் சுட்டுக்கொல்வதற்கு முந்திய நாள் துப்பாக்கியை பரிசோதித்த கொலையாளி

தோக்­கியோ: ஜப்­பா­னின் முன்­னாள் பிரதமர் ‌ஷின்சோ அபே­யைச் சுட்டுக்­கொல்­வ­தற்கு முந்­திய நாள் கொலை­யாளி துப்­பாக்­கி­யைப் பரி­சோ­தித்­த­தாக தெரிய வந்­துள்­ளது.

அபே­யைச் சுட்­டுக்­கொன்­ற­தா­கக் கரு­தப்­படும் டெட்­சுயா யம­காமி, சர்ச்­சைக்­கு­ரிய தேவா­ல­யத்­தால் முன்பு பயன்­ப­டுத்­தப்­பட்ட கட்­ட­டத்­தில் தமது துப்­பாக்­கி­யைப் பரி­சோ­தித்­த­தாக தேவா­ல­யம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் கூறப்­பட்­டி­ருந்­தது. அப்­போது யாருக்­கும் காயம் ஏற்­ப­ட­வில்லை என்­றும் அதில் கூறப்­பட்­டி­ருந்­தது.

கொலை­யாளி என்று சந்­தே­கிக்­கப்­படும் டெட்­சு­யா­வின் தாயார்­தான் தங்­கள் தேவா­ல­யத்­தில் உறுப்­பி­னர் என்­றும் டெட்­சுயா உறுப்­பி­னர் அல்ல என்­றும் தேவா­ல­யம் மீண்­டும் உறுதிப்­ப­டுத்­தி­யது.

தமது தாயா­ரின் நிதி நிலைமை மோச­மா­ன­தற்கு அந்த தேவா­ல­யத்­திற்கு அவர் அளித்த நன்­கொ­டை­தான் கார­ணம் என்­று டெட்சுயா சொன்னான்.

எனவே, அந்த தேவாலயத்தின் மூத்த உறுப்பினர் ஒருவரைத் தாம் கொல்ல நினைத்ததாகவும் ஆனால் அந்த சம­யக் குழு­விற்­கும் முன்னாள் பிரதமர் அபே­விற்கும் நெருங்­கிய தொடர்பு இருந்­த­தாக தாம் கரு­தி­ய­தால் அவ­ரைச் சுட்­ட­தாகவும் அவன் சொன்­னான்.

சென்ற வெள்ளிக்கிழமை அபே சுட்டுக்கொல்லப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!