அமெரிக்க கப்பலை விரட்டியது சீனா

அமெரிக்க கப்பலை விரட்டியது சீனா

1 mins read
a7e2734e-6cef-4d22-b9b7-a25b3e0a9dba
-

பெய்­ஜிங்: அமெ­ரிக்­கா­வின் நாசகாரக் கப்­பல் ஒன்றை தென்­சீ­னக் கடல் பகு­தி­யில் இருந்து விரட்டி அடித்த­தாக சீனா கூறி­யுள்­ளது.

தென்­சீ­னக் கடல் பகு­தி­யில் உள்ள சர்ச்­சைக்­கு­ரிய பாரா­செல் தீவுக்கு அரு­கில் சட்­ட­வி­ரோ­த­மாக அக்­கப்­பல் நுழைந்­த­தா­க­வும் அது சொன்­னது. அனைத்­து­லக சட்­டங்­க­ளுக்கு உட்­பட்­டு­தான் அப்­ப­கு­தி­யில் தனது கப்­பல்­கள் அங்கு சென்­ற­தாக அமெ­ரிக்கா கூறு­கிறது.

தென்­சீ­னக் கட­லின் சில பகு­தி­களில் சீனா அத்­து­மீ­றி கட்­டுப்­பா­டு­களை விதிப்­ப­தா­க­வும் அமெ­ரிக்கா கூறி வரு­கிறது.